Malaysia Airlines MH 370 மலேசியா விமானம் எம்.எச்370 227 பயணிகளுடன் காணமல் போனது. வரலாற்றில் இன்று. விமானத்திற்கு என்ன ஆனது என இன்று வரை தெரியவில்லை.
Malaysia airlines MH 370
2014 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி 227 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் மொத்தம் 239 பேர்களுடன் புறப்பட்ட எம்எச்370 விமானம் காணாமல் போன நாள் இன்று.
மலேசியா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் போயிங் 777-200ER எனும் விமானம் மலேசிய நேரப்படி கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகாலை 1.19 மணிக்கு போயிங் கேப்பிட்டல் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு கிளம்பியது.
தென்சீனக் கடல் பகுதிக்கு மேல் புறப்பட்டுச் செல்லும் போது, விமானம் 38 நிமிடங்கள் வரை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்தது.
பின்பு கட்டுபாட்டை இழந்து அடுத்த ஒரு மணிநேரம் வரை ராணுவ விமான ரோடர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
370 கிலோ மீட்டரில் உள்ள மலாய் பெனின்சுலா மற்றும் அந்தமான் தீவை தாண்டி செல்லும்போது ராணுவ ரேடாரின் கட்டுப்பாட்டை அடுத்த ஒரு மணி நேரத்தில் இழந்தது.
விமானம் காணமல் போனது
அடுத்த சில நொடிகளில் இந்த விமானம் அதன் பாதையில் இருந்து விலகி காணமல் போனது. இந்த விமானத்தில் இறந்தவர்களில் அதிகபட்சமாக சீனர்கள் 153 பேர்களும், மலேசியர்கள் 50, பேரும் இந்தியர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 239 பேர்கள் ஆவார்கள்.
மேற்கு இந்திய பெருங்கடலுக்கு மேல் சென்றதால் அங்குதான் விமானம் விபத்துக்குள்ளானது என்று 2015-ல் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை அதிக பணச் செலவில் 120000 சதுர கிலோ மீட்டர் தூரத்தில் தேடப்பட்டது.
2017-ஆம் ஆண்டு ‘ஜாயிண்ட் ஏஜென்சி கோ ஆர்டினேஷன் சென்டர்’ மூலம் தேடுதல் நிறுத்தப்பட்டது.
இரண்டாவது முறையாக ஓசன் இன்ஃபினிட்டி என்ற தனியார் நிறுவனம் இந்த விமானத்தை தேடும் முயற்சியில் இறங்கியது. அடுத்த ஆறு மாதத்தில் தேடுதலில் பலன் இல்லாததால் தோல்வியுடன் திரும்பியது.
விமான விபத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக மலேசிய mh370 விமானம் விபத்து சிறிதும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.
மலேசியா அரசாங்கத்தால் விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் ஊழியர்களும் இறந்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்து நடைபெற்ற சில மாதங்களிலேயே இதே ரக விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் இந்த விமான நிறுவனத்தை அரசாங்கம் தனியாருக்கு ஒப்படைத்தது.
மீண்டும் இதுபோல் விபத்து நடந்தால் கூட இதை தொடர்பு கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு இந்த விமானம் இயக்கப்பட்டு வருகிறது .
இந்த விபத்தில் எவரும் இறக்காமல், எங்கோ உயிர் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று கடவுளிடம் மனம் வேண்டுகிறது.
மலேசியாவின் மிகப்பெரிய கருப்பு நாள் இன்று. உலகிலேயே விமான விபத்திகளில் சிறிய அளவு கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.
இந்த விமானம் பற்றி பல வதந்திகள் கிளம்பின, அதில் ஒன்று விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது என்று.
இன்று இந்த விபத்து நடந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களுக்கு நினைவு நாளாக எண்ணி பிராத்திப்போம்.