Home வரலாறு உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்

உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்

576
2
சர்வதேச பெண்கள் தினம் today what special day in world march 8
உலக பெண்கள் தினம்

உலக பெண்கள் தினம் வரலாறு, உலக மகளிர் தினம் உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது?

உலக பெண்கள் தினம் வரலாறு

உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது.

முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நியூயார்க் நகரத்தில் சோசியல் பார்ட்டி ஆஃப் அமெரிக்காவால் முதலில் தொடங்கப்பட்டது.

சமூக ஆர்வலர் தெரசா மல்கில் தான் பெண்கள் தினம் கொண்டாட வென்றும் என்ற கருத்தை முன் வைத்தார். 1913ஆம் ஆண்டு ரஸ்சியா பெண்கள் பிப்ரவரி மாத கடைசி சனிக்கிழமையில் கொண்டாடி வந்தார்கள்.

1914ஆம் ஆண்டு ஜெர்மனி பெண்கள் மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக பெண்கள் தினமாக கொண்டாடினார். ஏனென்றால் ஜெர்மனி பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது.

யுனைடெட் நேஷன்ஸ்(UN) 1975-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அன்றிலிருந்து உலக பெண்கள் தினம் மார்ச் 8ஆம் நாள் உலக முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

உலக மகளிர் தின நோக்கம்

பெண்ணியவதியும் சமூக ஆர்வலறுமான குளோரியா ஸிடைனிம் கூறுகையில் ‘ பெண்களின் சம உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடி பெற்று கொடுத்தது எந்த ஒரு தனி பெண்ணியவாதியோ அல்லது ஒரு நிறுவனமோ அல்ல.

மனித சம உரிமையை புரிந்து அதற்கு ஆதரவாக பேசி பாலினத்தைப் பாராமல் தங்கள் பங்களிப்பை கொடுக்கும் ஒவ்வொரு மனிதரும் தான்.

சமூதாயத்தில் பெண்களின் வளர்ச்சி, சம உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக மகளிர் தினத்தின் நோக்கம்.

பெண்கள் சாதிக்காத துறை இல்லை. அவர்களுக்கு வேண்டிய சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கொடுத்தால் இந்த சமுதாயம் மனித வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை நிச்சயம் அளிப்பார்கள்.

International Women’s Day 2020 Theme

மகளிர் தினத்தை குறிக்கும் வண்ணங்கள்

உலகத்தில் ஊதா (Purple) வண்ணம் பெண்களை குறிக்கும். ஊதா, பச்சை மற்றும் வெள்ளை பெண்களின் சமத்துவத்தை குறிக்கிறதாம்.

ஊதா வண்ணம் குறிப்பது தன்மானம் மற்றும் நியாயம். பச்சை வண்ணம் நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கிறதாம்.

எவ்வாறு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது

சமூக வலைதளங்கள் பிரபலமான பிறகு மகளிர் தினம் அதிகமாக பகிரப்பட்டு பெண்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகிறது.

கூகிள் டூடுல் பக்கத்தில் கூகிள் நிறுவனம் புதிய புதிய ஓவியங்கள், புகைப்படங்களை வைத்து சிறப்பிக்கிறது. மெட்ரோ நகரங்களில்  விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here