Home நிகழ்வுகள் இந்தியா உல்லாச பயணம்: இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்

உல்லாச பயணம்: இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்

495
0
corona virus உல்லாச பயணம் ருத்ர தாண்டவம் கொரானா வைரஸ்

உல்லாச பயணம்: இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம். கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. corona virus.

புதுமுக தம்பதிகள் உல்லாச பயணம்

புதியதாக கல்யாணம் ஆகிய தம்பதிகள் நிச்சயம் ஹனிமூன் செல்ல ஏற்பாடுகள் செய்து இருப்பீர்கள். அந்த இடம் நிச்சயம் ஒரு குளிர் பிரதேசமாக இருக்கும்.

மிகவும் வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்வார்கள். இவற்றை எல்லாம் சில நாட்கள் தள்ளிவைப்பது நல்லது.

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம்

கொரோனா வைரஸ் (corona virus) என்பது ருத்ர தாண்டவம் ஆடி வரும் நிலையில் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலா சென்றவர்கள், ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் இப்படி ஏராளமானவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தப்பி தவறி சொந்த நாடு திரும்பினாலும் உடனடியாக வீட்டிற்கு செல்ல முடியாது. உடல் வெப்பநிலை சற்று அதிகம் இருந்தாலும் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்படுவார்கள்.

வெளிநாடோ, உள் நாடோ கொரோனா தற்பொழுது எந்த அளவில் இந்தியாவிற்குள் பரவி உள்ளது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்த நகரத்தில் இல்லை, அந்த நகரத்தில் இல்லை என பயணிகள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பதே நல்லது.

சீனாவில் இவ்வளவு பெரிய கட்டுப்பாட்டையும் மீறி கொரானா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி விட்டது. அப்படி இருக்கையில் நீங்கள் இருக்கும் நகரத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகப்போகிறது.

வருமுன் காப்பதே சிறந்தது என்பதைப்போல புதுமுக நபர்களை அதிகம் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது.

Previous articleஉலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்
Next articleசமந்தா கர்ப்பமா? இதோ புதிய தகவல்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here