Home சினிமா கோலிவுட் சமந்தா கர்ப்பமா? இதோ புதிய தகவல்!

சமந்தா கர்ப்பமா? இதோ புதிய தகவல்!

305
0
Samantha Pregnant

Samantha Pregnant; சமந்தா கர்ப்பமாக இருப்பதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா கர்ப்பமாக (Samantha Pregnant) இருப்பதால் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து விலகியுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

விக்னேஷ் சிவன்

சிம்பு நடிப்பில் வந்த போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக வலம் வந்தவர் விக்னேஷ் சிவன்.

இப்படத்தைத் தொடர்ந்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தற்போது இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருப்பதால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நயன்தாராவின் கால்ஷீட் பிரச்சனையெல்லாம் விக்னேஷ் சிவன் தான் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், அவருக்கு கதை தேர்வையும் விக்னேஷ் சிவனே செய்வதாகவும் கூறப்படுகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இந்தப் படத்தின் கதை சமந்தா (Samantha Pregnant) மற்றும் நயன்தாராவிற்கு பிடித்துப் போக இருவருமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல் 

இந்த நிலையில், சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து விலகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.

சமந்தா கர்ப்பமாக இருப்பதால் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Samantha Pregnant? சமந்தா கர்ப்பம்?

தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்துள்ளார். இருவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் சமந்தா கொஞ்சம் கிளாமரை குறைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்ற வருத்தமும் ரசிகர்களிடையே இருக்கத்தான் செய்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஉல்லாச பயணம்: இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்
Next articleYes Bank சேவையை கையில் எடுத்த RBI ஒரே நாளில் 50% மேல் பங்குகள் விலை குறைவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here