Yes Bank சேவையை கையில் எடுத்த RBI ஒரே நாளில் 50% மேல் பங்குகள் விலை குறைவு, Yes Bank பங்குகள் 50%க்கு மேல் குறைவு
நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட எஸ் பேங்கை தான் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 50000 வரை தான் எடுக்க இயலும் என அறிவித்தது.
இதை அறிந்த வாடிக்கையாளர்கள் இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது அதன் சர்வர்களும் முடக்கப்பட்டன. ஏடிஎம் சென்றும் முயற்சி செய்தும் யாரும் எடுக்க இயலவில்லை.
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி காரணமாக அதை கையில் எடுத்தது போல தற்பொழுது எஸ் பேங்க்கவும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
500 கோடி வரை நிதி நெருக்கடியை எஸ் பேங்க் சந்தித்ததே ஆர்பிஐயின் இந்த முடிவுக்கு காரணமாகும். இதன் வங்கியின் பயனாளர்கள் யாரும் எந்த விதத்திலும் பாதிக்கபட மாட்டார்கள் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
Yes Bank பங்குகள் 50%க்கு மேல் குறைவு
இதை தொடர்ந்து வங்கியின் சேவைகள் அனைத்தும் முடங்கியதால் இதன் பங்குகளின் விலை வேகமாக குறைந்து விட்டது.
வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி ஒரு பங்கின் விலை 18.90 காசக உள்ளது. இன்று மட்டும் இதன் விலை 51% குறைந்தது.
மருத்துவம், படிப்பு போன்ற அவசர செலவிற்கு அவசர செலவிற்கு பேங்க் நிர்வாகியை தொடர்பு கொண்டு 5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.