Home நிகழ்வுகள் உலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு

உலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு

397
0

உலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு

உலகக் காச நோய் தினம், மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ராபர்ட் கோச் காச நோய் ஏற்படுவதற்காண காரணத்தை கண்டறிந்தார். இதுவே காச நோய் பற்றிய அனைத்து தகவல்களை அறிவதற்கு காரணமாக அமைந்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது.

1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. அந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 7இல் ஒருவர் உயிரழந்தனர்.

2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.

உலகக் காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால்(WHO) அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாட்களில் ஒன்றாகும்.

 

 

Previous articleமுதல் ஐ‌பி‌எல் போட்டியில் சி‌எஸ்‌கே அபார வெற்றி
Next article4000 கோள்கள் கண்டுபிடிப்பு; அத்தனையும் உண்மை!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here