Home அறிவியல் 4000 கோள்கள் கண்டுபிடிப்பு; அத்தனையும் உண்மை!

4000 கோள்கள் கண்டுபிடிப்பு; அத்தனையும் உண்மை!

1914
0
4000 கோள்கள் கண்டுபிடிப்பு

4000 கோள்கள் கண்டுபிடிப்பு; அத்தனையும் உண்மை!

கலிலியோ தொலைநோக்கி கண்டுபிடித்த காலம் முதலே  விண்வெளி பற்றிய பல ஆராய்ச்சிகள் இன்று வரை நடந்து கொண்டே தான் உள்ளது.

இதுவரை நாம் வாழும் சூரிய மண்டலம் மற்றும் அதைத் தாண்டி 4000 கோள்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் எத்தனை கிரகம் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத் தகுதியானது என்பதற்கு இன்னும் விடைகிடைக்கவில்லை.

நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலியே இன்னும் தண்ணீர் இருக்கிறதா என தொடர்ந்து பல ஆராய்ச்சிகள்  நடந்துகொண்டே உள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் ‘தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா‘ தற்போதுவரை 4,000-க்கும் அதிகமான கோள்கள் சூரிய குடும்பத்தை தாண்டி உள்ளது என உறுதி செய்துள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 3926 கோள்களை மட்டுமே உறுதி செய்துள்ளது.

நாசாவிற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் 4000 கோள்கள் உள்ளதை கண்டறிந்து உள்ளது. இன்னும் 74 கோள்களை நாசா ஆவணப்படுத்தினால் மட்டுமே 4000 கோள்களை கண்டறிந்த பட்டியலில் இடம்பெற முடியும்.

Previous articleஉலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு
Next articleமோடிக்கு எதிராக 111 பேர் போட்டி; வாரணாசியை அதிரவைக்கப்போகும் தமிழக விவசாயிகள்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here