Home ஜோதிடம் 1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

646
0
1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்களுக்கு இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக அமையும். நம்பிக்கையுடன் செல்லுங்கள்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபாடு செய்ய வாழ்க்கை நிலை மேலோங்கும். வயிற்று உபத்திரவம் இன்று சரியாகும்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

எட்டில் கேது இருப்பதால் இன்று ஒழுக்கமுடன் இருப்பது நல்லது. தேவையில்லாத நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மிதுன ராசிபலன்

நீங்கள் எந்த காரியத்திலும் தைரியமுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றிவாகை சூடுவீர்கள். சூரிய வழிபாடு வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம்

கடக ராசிபலன்

இன்று கடக ராசிகாரர்களுக்கு பணவரவு கொண்ட நாளாக அமைந்துள்ளது. இன்று உங்களுக்கு பெரிய யோகம் காத்துக்கொண்டு உள்ளது.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். பிசினஸ் பார்ட்னரிடம் இருந்த பகை மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1

சிம்மம் ராசிபலன்

ராசியில் சந்திரன் தங்கி, பிறகு தனஸ்தானத்திற்கு இடம்பெயருகிறார். நல்ல தனவரவு, நண்பர்களோடு கேளிக்கை, அரட்டை, மகிழ்ச்சி, என்று ஆனந்தப்படும் நாள்.

குடும்பத்தில் சந்தோஷம் கூடிவரும் நாள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

கன்னி ராசிகாரர்களுக்கு ஏற்ற நாள். நீங்கள் விரும்பிய கன்னி உங்கள் காதலை ஏற்கும் நாள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் நாள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாயை அடக்கியாள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

துலாம் ராசிபலன்

திருமண வாழ்க்கையின் உன்னதத்தை உணரும் நாள். மனமினிக்கும் தருணங்களை கணவன் மனைவியர் மகிழ்ந்து பாராட்டிச் சிறக்கும் நாள்.

உணவை அளவறிந்து உண்ண வேண்டி நாள்.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம். அதிர்ஷ்ட எண் : 9

விருச்சிக ராசிபலன்

பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தக் காரியமும் செய்தல் கூடாது.

அதேபோல கருத்தும் சொல்லக் கூடாது. மாமியாரின் உடல்நிலையில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : தேன்வண்ணம் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

தனுசு ராசிபலன்

பிள்ளைகளை மீது அதிக அக்கறை செலுத்துங்கள். அவர்கள் படிப்பில் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. பொறுமையாக எடுத்துச் சொல்லி ஆலோசனை வழங்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

மகரம் ராசிபலன் 

மதியத்திற்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. சகோதரருடைய உடல்நலத்தில் அக்கறை தேவை.

மனதிற்கும் செயல்பாட்டுக்கும் இடையே ஒருவித மாறுபாடு வந்து கொண்டேயிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், எண் : 7

கும்ப ராசிபலன்

காலைப்பொழுது அருமையாக காணப்படுகிறது. மாலையிலிருந்து மௌனம் காக்க வேண்டியது அவசியம். எதிலும் அவசரப்பட்டு கருத்துச் சொல்லாமை நலம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

அடிக்கடி கோபப்படும் நாள் இது. பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அலுவலகத்தில் பணிபுரிவர்கள் கவனமுடம் வார்த்தைகளை பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

1/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleMaster: மாஸ்டர் அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!
Next articleKaithi Hindi Remake: பாலிவுட்டுக்கு சென்ற கார்த்தியின் கைதி!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here