Home சினிமா கோலிவுட் Kaithi Hindi Remake: பாலிவுட்டுக்கு சென்ற கார்த்தியின் கைதி!

Kaithi Hindi Remake: பாலிவுட்டுக்கு சென்ற கார்த்தியின் கைதி!

260
0
Kaithi Hindi Remake கார்த்தி கைதி அஜய் தேவ்கன்

Kaithi Hindi Remake: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் கார்த்தி கைதி படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaithi Hindi Remake

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் கைதி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு ஹீரோயினும், ரொமாண்டிக் பாடல்களும் இல்லை. படம் முழுவதும் இரவில் மட்டும் நடக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு பின்னர் விடுதலையாகி வெளியில் வந்த கார்த்தி சந்திக்கும் பிரச்சனைகள் தான் படம்.

அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு உதவ சென்ற இடத்தில் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில், அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா என்பதே படத்தின் மையக்கரு.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தீனா, நரேன், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், அருண் தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருக்கிறது. எனினும், அது எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்169 படத்தின் பூஜை வரும் மார்ச் 5-ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழில் கைதிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

ஹிந்தி ரீமேக்கில் (kaithi hindi remake) அஜய் தேவ்கன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, இப்படம் வரும் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous article1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleவிக்ரமின் கோப்ரா ஃபஸ்ட் லுக் பயமுறுத்தியதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here