21/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷம் ராசிபலன்
இத்தனைநாள் வேலை வாய்ப்பு இல்லாதிருந்தவர்களுக்கு ஒரு நல்ல வேலை இன்று கிடைக்கும்.
மஹா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்ய வாழ்க்கை நிலை மேலோங்கும். வயிற்று உபத்திரவம் இன்று சரியாகும்.
அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம்.
ரிஷபம் ராசிபலன்
இன்று மிகவும் சுத்தபத்தமாக இருப்பது அவசியம். இனம்புரியாத நோய் ஒன்று இன்னலைத் தர நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5
மிதுன ராசிபலன்
தைரியமும் தன்னம்பிக்கையும் மிகுந்து காணப்படும் நாளாகக் காணப்படுகிறது. வெற்றிகரமான நாளாக அமையும். சூரியனை வழிபட வாழ்க்கை பிரகாசிக்கும். நன்னல மேம்பாடுடை காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம்
கடக ராசிபலன்
நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. மிகச் சிறந்த யோகங்கள் காணப்படுகிறது.
கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். பிசினஸ் பார்ட்னரிடம் இருந்த பகை மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1
சிம்மம் ராசிபலன்
நினைத்ததை வாங்கி மகிழும் நாளாகக் காணப்படுகிறது. நல்ல தனவரவு, நண்பர்களோடு கேளிக்கை, அரட்டை, மகிழ்ச்சி, என்று ஆனந்தப்படும் நாள்.
குடும்பத்தில் சந்தோஷம் கூடிவரும் நாள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5
கன்னி ராசிபலன்
காதலில் வசீகரம் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. மனதில் நினைத்தவர்கள் மனமிறங்கி வருவார்கள்.
கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் நாள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாயை அடக்கியாள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6
துலாம் ராசிபலன்
திருமண வாழ்க்கையின் உன்னதத்தை உணரும் நாள். மனமினிக்கும் தருணங்களை கணவன் மனைவியர் மகிழ்ந்து பாராட்டிச் சிறக்கும் நாள். உணவை அளவறிந்து உண்ண வேண்டி நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம். அதிர்ஷ்ட எண்: 9
விருச்சிக ராசிபலன்
பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தக் காரியமும் செய்தல் கூடாது.
அதேபோல கருத்தும் சொல்லக் கூடாது. மாமியாரின் உடல்நிலையில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: தேன்வண்ணம் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3
தனுசு ராசிபலன்
தங்களது பிள்ளைகளின் மீதான அக்கறையை அதிகப்படுத்த வேண்டிய நாள். படிப்பில் கவனம் சிதறும் பிள்ளைகளுக்கு ஆலோசனை அளித்து ஆறுதல் சொல்லி தேற்றுவது அவசியம்.
விவாகரத்து போன்ற விவகாரங்களில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நலம்.
அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4
மகரம் ராசிபலன்
மதியத்திற்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. சகோதரருடைய உடல்நலத்தில் அக்கறை தேவை.
மனதிற்கும் செயல்பாட்டுக்கும் இடையே ஒருவித மாறுபாடு வந்து கொண்டேயிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், எண் : 7
கும்ப ராசிபலன்
காலைப்பொழுது அருமையாக காணப்படுகிறது. மாலையிலிருந்து மௌனம் காக்க வேண்டியது அவசியம்.
எதிலும் அவசரப்பட்டு கருத்துச் சொல்லாமை நலம். சொத்துக்கள் சேரும் நாளாகக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பு பெறும் நாள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3
மீனம் ராசிபலன்
திடீர் திடீர் என்று கோபம் வரும் நாளாகக் காணப்படுகிறது. சகிப்புத்தன்மை, பொறுமை அவசியம்.
அலுவலகத்தில் எரிச்சலடையாமல் எச்சரிக்கையாக இருப்பது மிக உத்தமம். நல்ல வேலை கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9
21/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.