டுவிட்டரில் மோதிக் கொண்ட சூர்யா, தனுஷ் ரசிகர்கள்: டிரெண்டாகும் #DhanushStardomRules ஹேஷ்டேக்! டுவிட்டரில் தனுஷ், சூர்யா ரசிகர்கள் தங்களுக்குள்ளாக மோதிக் கொண்டுள்ளனர்.
டுவிட்டரில் #DhanushStardomRules ஹேஷ்டேக் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சினிமாவில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தங்களது ஹீரோ தான் உயர்ந்தவர், அவரது படங்கள் தான் ஹிட் கொடுக்கும் என்றெல்லாம் பெருமையாக பேசி டுவிட்டரில் கருத்து பதிவிடுவது வழக்கம்.
இதற்கு போட்டியாக அந்த நடிகரை பிடிக்காத ரசிகர்கள் அதற்கு எதிராக டுவிட்டரில் கருத்து தெரிவிப்பது உண்டு. அப்படியே அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதமல் உண்டாகும்.
அப்படிதான் சூர்யா, தனுஷ் ரசிகர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சூர்யாவைவிட தனுஷிற்குதான் ரசிகர்கள் அதிகம் என்றும், தனுஷ் பட இசை வெளியீட்டு விழாவிற்கு தான் அதிக ரசிகர்கள் வருவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர். ஆம், தனுஷ் – விஜய் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே விஜய் – சூர்யா ரசிகர்களுக்கு வாக்குவாதம் நடப்பது உண்டு. அதை, தற்போது விஜய் ரசிகர்கள் தனுஷிற்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
தனுஷ் என்னதான் மாஸ் நடிகராக இருந்தாலும் தோல்விப்படங்களை கொடுத்துள்ளார் என்று சூர்யா ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு தனுஷ் ரசிகர்கள் உண்மைதான். படம் என்றாலும், ஹீரோ என்றாலும் வெற்றி தோல்வி பொதுவானதுதான். ஆனால், தனுஷின் தோல்விப்படங்கள் கூட திரையரங்குகளில் 2 வாரங்களுக்கு மேலாக ஓடியிருக்கின்றனர்.
இதுவே சூர்யா படம் வந்த முதல் நாளே திரையரங்கை விட்டு வெளியேறிய காலமெல்லாம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக ரசிகர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடப்பது என்பது வழக்கம் தான். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வாக்குவாதம் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லாக்டவுன் காலம் என்பதால் இன்னும் சூர்யா, தனுஷ், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் திரைக்கு வரவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.
3 படங்களும் வெளியாகும் போது இதைவிட ரசிகர்களுக்கிடையே வாக்குவாதம், சண்டை அதிகளவில் இருக்கும்.