Home Latest News Tamil தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயன்! படப்பிடிப்பு எப்போது?

தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயன்! படப்பிடிப்பு எப்போது?

424
0

நெல்சன் திலீப்குமார் இயக்கம் விஜய்யின் 65-வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்திற்கு தளபதி65 என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சன்பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க பெரும் தொகையாக ரூ. 3.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் ராஷ்மிகா மந்தன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளது.

ஆனால் பூஜா ஹெக்டே, பாலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் பாப்புலர் என்பதால் அவரையே இறுதி செய்துவிட்டது படக்குழு. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து ‘தளபதி 65’ படத்திற்கும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத வேண்டும் என அனிருத் மற்றும் நெல்சன் கேட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அனேகமாக இந்தப்பாடலை விஜய் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்தவுடன் படப்பிடிப்பை துவங்குவது என படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.

The post தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயன்! படப்பிடிப்பு எப்போது? appeared first on MrPuyal Cinema.

Previous articleதயாரிப்பாளரை கொள்ளையடித்த இயக்குனர் தம்பதி!
Next articleதளபதி65: பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் கேட்டாரா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here