நான்காவது கட்ட ஊரடங்கு ? தொழிலதிபர்களிடம் முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் வரும் 17 தேதியுடன் மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடைவதால் 18 தேதி முதல் நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நான்காவது கட்ட ஊரடங்கு:
ஏற்கனவே மூன்று கட்ட ஊரடங்கிலும் சில தளர்வுகளுடன் பல்வேறு தொழில் நடைபெற்று வருவதால் அடுத்து வரும் நான்காவது கட்ட ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் தொழில் துறையினருக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய முதல்வர் நேற்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினர் .
அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று பல்வேறு தொழில் துறையினர் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளார் என்று தெரிகிறது .,
துணை முதல்வர் பங்கேற்பு:
இன்று நடைபெறும் தொழில் துறை சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனையில் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்