மலேசியா பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவுடன் மோதலைக் கடைபிடித்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
பிப்.24: மலேசியா பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லாக்கு அனுப்பினார்.
2018-ஆம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ராசாக்கை எதிர்த்து வெற்றி பெற்ற மகாதீர் முகமது தன் நாட்டு மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அறிவித்தார்.
இந்தியாவுடன் மோதல்
மகாதீர் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் பேசியதால், மலேசியாவுடன் அதிக வர்த்தகத்தில் உள்ள பாமாயில் ஏற்றுமதியை இந்தியா முறித்துக் கொண்டது.
அதுவே அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகக் காரணமானது. பின்பு பாகிஸ்தானுக்கு அதிக பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு கையழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இவரின் இந்த ராஜினாமா மலேசியா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பின்னால் உள்நாட்டு அரசியல் அழுத்தம் உள்ளது.
இதன் காரணமாகவே மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.