Home நிகழ்வுகள் தமிழகம் முடியும் ஊரடங்கு ? இன்று இரவு பிரதமர் உரை

முடியும் ஊரடங்கு ? இன்று இரவு பிரதமர் உரை

253
0

முடியும் ஊரடங்கு ? இன்று இரவு பிரதமர் உரை

நாட்டில் மூன்றாவது முறையாக கொரோன வைரஸ் குறித்து பிரதம அமைச்சர் மோடி இன்று இரவு சுமார் 8 மணியளவில் உரை ஆற்ற  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

உலக சுகாதார அமைப்பு பாராட்டு:

சீனாவில் தோன்றிய காரோண வைரஸ் காரணமாக உலகமே அல்லல்பட்டு வரும் வேளையில் இந்தியா  அதனை மிகவும் தன்னம்பிக்கையுடன் கையாண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது .

இறப்பு சதவீதம் மிக குறைவு:

உலக நாடுகளை விட கொரோன வைரஸ் காரணமாக இறப்பவர்களின் சதவீதத்தை இந்தியா மிகவும் கவனமுடன் கையாண்டு வருகிறது

மக்கள் ஊரடங்கு:

முறையான நேரத்தில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் பயனால் நோய் தொற்றில் இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறது .

முதன் முதலாக மார்ச் 22 மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .

அதனை அடுத்து கடந்த மார்ச் 24 தேதி இரண்டாவது முறையாக ஏப்ரல் 15 தேதி வரை முதல் நீண்ட ஊரடங்கு அமல்படுத்த பட்டது .

ஊரடங்கு நீட்டிப்பு:

அடுத்ததாக மே 3 வரை ஊரடங்கு முதல் தடவையாக நீட்டிக்கப்பட்டது.

எனினும் நோய் தோற்று அதிகரித்ததன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 17 தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு சில தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன .

மோடி ஆலோசனை:

இந்நிலையில்தான் நேற்று மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம்  ஆலோசித்த மோடி இன்று இரவு  நாட்டு மக்களுக்கு உரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் எதிர்பார்ப்பு:

இதன் காரணமாக மோடி உரை குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் எனினும் இந்த முறை மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது , இன்னமும் இது குறித்து அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்று வரை கொரோன தொற்றினால் சுமார் 70000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிறக்கப்படும் பள்ளிகள் – தமிழக அரசு அதிரடி
Next articleகோடை மழை  –  வானிலை மையம் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here