Home தொழில்நுட்பம் மொபைல் பேட்டரி அதிக நேரம் நீடிக்க என்ன செய்யலாம்?

மொபைல் பேட்டரி அதிக நேரம் நீடிக்க என்ன செய்யலாம்?

என்னதான் 3000 MAH , 5000 MAH திறன் கொண்ட பேட்டரியை வாங்கினாலும் , லித்தியம் அயன் போன்ற பாகுபாடு உணர்ந்து வாங்கிவந்தாலும் பலருக்கு பத்துவதே இல்லை. நீங்கள் விளம்பரங்களில் கானும் " For long lasting mobile battery "  இதைப் பொருத்து தான்.

610
0
மொபைல் பேட்டரி செல்போன் ஜார்ஜ் Extend moblie battery performance saver
Abstract Battery supply digital concept

மொபைல் பேட்டரி திறனை எப்படி அதிகரிக்க வைப்பது? அதிக நேரம் செல்போனில் சார்ஜ் நிற்க என்ன செய்ய வேண்டும்? how to Extend moblie battery performance saver?

இன்றைய மின்னல் வேக வாழ்க்கை முறையில் மொபைல் போன் இன்றி எதுவுமில்லை. காலை எழுவது முதல் இரவு உறங்க செல்வது வரை மொபைல் மட்டுமே நம்மை விட்டு இணை பிரியாமல் இருப்பது. மொபைலில் பேட்டரி எதனால் குறைகிறது என்பதே அதிமுக்கியம். 

சில நேரங்களில் அது உற்பத்தி பிழையாகக் கூட இருக்கலாம் , மொபைல் வாங்கி ஒரு ஓரிரு நாளிலே பேட்டரியின் திறன் மோசாமாவது போல் உணர்ந்தால், உடனடியாக “ரீ பிளேஸ்“ எனப்படும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்னதான் 3000 MAH , 5000 MAH திறன் கொண்ட பேட்டரியை வாங்கினாலும், லித்தியம் அயன் போன்ற பாகுபாடு உணர்ந்து வாங்கி வந்தாலும் பலருக்கு பத்துவதே இல்லை. நீங்கள் விளம்பரங்களில் கானும் “For long lasting mobile battery”  , “To extend moblie battery performance ” இதைப் பொருத்து தான்.

நமது நவீன உலாப்பேசிகளில் நமக்கு மிக நிறைவான வசதிகள் உள்ளது. இருந்தும் நம்முடையை ஆர்வகோளாறில் சில ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்துவிட்டு பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றோம்.

ஆனால், அந்த ஆப்கள் நமது பேட்டரிக்கு ஆப்பு வைக்கிறது. உதாரணமாக “செய்திகள்” செயலிகள் ஓயாமல் தகவல்களை திரையில் தள்ளிக்கொண்டே இருக்கும்.

அதை நாம் சற்று மாற்றி, நாம் விரும்பும் நேரத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ளும்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

கூகிள் செயலியும் ஓயாமல் “போக்கு வரத்து“ “நடப்பு நிகழ்வுகள்” என்று தகவல்களை தள்ளும், அத்துடன் மொபைலின் பேட்டரியைக் கொல்லும். அவற்றை நமது வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம் .

மொபைலின் வெளிச்சக்கட்டுப்பாடு முறையைப் பயன்படுத்தினால் நேரத்திற்கு தகுந்தாற்போல அவை செயல்படும் .

தற்போது சாதாரணமாகவே 8 GB நினைவுத்திறன் கொண்ட மொபைல் போன் கிடைக்கின்றது . நம்முடைய பயன்பாடு தான் அதிலும் சூட்சமமானது .

பிளைட் மோடில் போனை வைத்துவிட்டு சார்ஜ் செய்தால் எந்த இடையூறுமின்றி துரிதமாக சார்ஜ் ஏறும், அப்படி இல்லாவிடில் மொபைல் டேட்டா/வைபை ஆகியவற்றை  துண்டித்துவிட்டு சார்ஜ் போடலாம்.

உறங்கச் செல்ல சில மணிநேரத்திற்கு முன் சார்ஜ் போட்டுவிட்டு உறங்கும் முன் ஆப் செய்து விடலாம்.

நாம் பரபரப்பாக மொபைலை இயக்கும்போது நம்மை அறியாமலே “ப்ளூ டூத் “ , “ஆட்டோ ரொட்டேட்“ போன்ற எதையாவது தட்டி வைத்துவிட்டாலும் அதுவும் பேட்டரியை விழுங்கும்.

அக்ஷயை குமார் நடித்த “மைக்ரோ மாக்ஸ்” மொபைல் விளம்பரத்தில் வருவது போல் இல்லாமல், மொபைலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினால் நம்மை அது படுத்தாது .

பேட்டரி சேவர் முறை மிகவும் பயனுள்ளது ஆனால் அதையும் நாள் முழுக்க பயன்படுத்துவது உகந்தது அல்ல .

ஓயாமல் பவர் பேங்க், சார்ஜர் கொண்டு மொபைல் போனை துன்புறுத்தினாலும் அவற்றின் திறன் மட்டுப்படும். 

மொபைல் பேட்டரி 10% கீழ்வந்து விட்டால் அதில் நாம் பேசுவதை தவிர்க்கலாம், ஏன்எனில் அப்போது கதிர் வீச்சு அதிகமாகவே இருக்கும்.

ஒருநாளைக்கு குறைந்தது 2 மணிநேரமாவது மொபைலுக்கு ஓய்வு அளிக்கவேண்டும் என்கிறது ஒரு ஆய்வு. அவர்கள் கூறுவது உறங்கும் நேரம் தவிர.

சா.ரா 

Previous articleமும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா?
Next articleஉலகமகா நடிகனாக திகழும் சியான் விக்ரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here