மும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா? Mumbai Corona Updates.
இந்தியாவில் மும்பை மாநகரத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக கொரோனா அறிகுறி இருப்போருக்கு 7 நாடகள் தனிமைக்கு பிறகே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதாம்.
உடனடியாக பரிசோதனை செய்தால் 7 நாட்களுக்கு பிறகு கூட முடிவில் மாற்றம் வார வாய்ப்பு இருக்கிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 7 நாட்கள் தனிமையில் கொரோனா பாதிப்பா இல்லை சாதாரண காய்ச்சலா என தெரிந்து விடும்.
இந்தியாவில் இது வரை கொரோனோவால் 13 ஆயிரத்து 387 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப் 13 வரை மும்பையில் மட்டும் 27,397 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,17,554 சோதனைகளில் 12.59 சதவீதமாகும்.