10/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷம் ராசிபலன்
பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகக் காணப்படுகிறது. அலுவலக நண்பர்களோடு கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கூர்ந்து கவனித்து உள்வாங்குவது லாப முன்னேற்றத்தைப் பெருக்கும். மகளிருக்கு நகை, பொன், பொருள் சேரும் நாளாகக் காணப்படுகிறது.
அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: காக்கி வண்ணம்
ரிஷபம் ராசிபலன்
ராசிநாதன் சுக்கிரன் உச்சமடைந்துள்ளதால் எதிலும் வெற்றி குவியும். ஆடம்பரத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதேசமயம் கேட்ட பொருள் உடனே கிடைக்கும். மிகவும் சுபிட்சமான நாளாகக் காணப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண்: 7
மிதுன ராசிபலன்
சந்திரன் மூன்றில் சஞ்சரிப்பதால் தைரியம் கூடும். மன உறுதி ஆற்றல் அதிகரிக்கும். எந்த விதமான பயணங்களிலும் வெற்றி உண்டு.
காவல் துறையினரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல்நலத்தில் சிறிது அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம்.
கடக ராசிபலன்
அரிதான பல திறமைகள் வெளிப்படும் நாளாகக் காணப்படுகிறது. அவற்றினை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடும் நாள்.
உடல் நலத்தில் சிறது அக்கறை தேவை. போதை வஸ்த்துகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் அளவோடு ஜாக்கிரதையாக இருப்பது நலம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9
சிம்மம் ராசிபலன்
சந்தோஷம் இருக்கும் அதே நேரம் ஏதோ சந்தேகம் நெஞ்சை உருத்திக் கொண்டே இருக்கும் நாள். வீண் சந்தேகங்கள் மனதில் வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும்.
நடுநிலையான மனநிலை நிம்மதி தரும். வேலைப்பளு இருக்கும். திருமணப் பேச்சுக்கள் சுபமானதாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: பால்வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6
கன்னி ராசிபலன்
நல்ல நாளாகக் காணப்படுகிறது.வேண்டிய இடமாற்றம் கிட்டும் நாள். ப்ரொமோஷனுக்காக காத்திருத்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். வைரல் தொற்று ஏற்படலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5
துலாம் ராசிபலன்
முழுக்க முழுக்க நல்ல நாளாகக் காணப்படுகிறது. உங்கள் பேச்சு சிலருக்கு கோபத்தையும், பொறாமையும் ஏற்படுத்தலாம். எதிலும் லாப முன்னேற்றம் உண்டு.
சிறு சிறு பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் நாள். ஆன்லைன் தொழிலில் அதிர்ஷ்டம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம். அதிர்ஷ்ட எண்: 2
விருச்சிக ராசிபலன்
உங்களுடை புகழைக் குழைக்க நினைப்பவர்களை விட்டு ஒதுங்கியிருப்பதும், அவர்களைத் தள்ளி வைப்பதுமே மிகவும் சிறந்தது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். தகாத தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிக்கல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1
தனுசு ராசிபலன்
மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. தூர தேசத்திலிருந்து இதுவரை வெகுவாகக் காத்திருந்த நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.
சந்தோஷம் நிறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. பணியிடங்களில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5
மகரம் ராசிபலன்
எதிலும் பொறுமையும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. வார்த்தையைப் பயன்படுத்தும்போது மிக கவனம் தேவை.
கூடுதல் குறையாக தவறாகப் பேசி விடக் கூடும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. மின்சார உபகரணங்களைக் கையாள்கையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், எண் : 6
கும்ப ராசிபலன்
வெளி வட்டாரத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். குடும்ப ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டிய நாள். யவரை நம்பியும் ரகசியங்களைப் பகிரக் கூடாது. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9
மீனம் ராசிபலன்
10/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.