Home நிகழ்வுகள் உலகம் ட்ரம்ப் அதிரடி: எதிராக வாக்களித்தவர்கள் பதவி நீக்கம்

ட்ரம்ப் அதிரடி: எதிராக வாக்களித்தவர்கள் பதவி நீக்கம்

351
1
ட்ரம்ப் அதிரடி

ட்ரம்ப் அதிரடி: செனட் சபையில் தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு

அமெரிக்காவின் 45-ஆவது அதிபர் டிரம்ப் இவர் குடியரசு கட்சியின் சார்பில் அதிபரானவர்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கைட்டையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார் செனட் சபையில்.

மேலும் இந்தாண்டு நடைபெற உள்ள தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டி போட உள்ள ஜோ பிடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் படு உக்ரைன் அதிபரை மிரட்டியதாகவும் கூறி டிசம்பர் மாதம் பதவி நீக்க விசாரணை செய்ய செனட் சபைக்கு அறிவுறுத்தியது ஜனநாயக கட்சி.

தீர்மானம் தோல்வியில் முடிந்தது

அவர் மீதான குற்றச்சாட்டிற்கு அவர் பதவி விலக வேண்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்பே நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறி இருந்த நிலையில் செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது தோல்வி அடைந்தது.

அதிகாரிகள் பதவி நீக்கம்

இதையடுத்து தனக்கு எதிராக பதவி நீக்கத்திற்கு சாட்சி கூறிய மூத்த அதிகாரிகள் கார்டன் சாண்ட்லேண்ட் (ஐரோப்பிய கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர்) மற்றும் அலெக்சாண்டர் (தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசகர்) ஆகிய இருவரையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

Previous articleடெல்லி தேர்தல்: மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி
Next article10/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here