டெல்லி தேர்தல்: மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக உள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்பில் மீண்டும் ஆம்ஆத்மி முதலிடம். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
சட்டப்பேரவைத் தேர்தல்
இன்று 08.02.2020 சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்பில், அதாவது காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில் மாலை 5 மணி நிலவரப்படி 53.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மொத்த தொகுதிகளும் வாக்கு சதவீதமும்
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 13,750 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.
இதில் ஆண் வாக்காளர்கள் 81,05,236 ஆகவும், பெண் வாக்காளர்கள் 66,80,277 ஆக மொத்தம் 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 52.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் க்யூஆர்கோட் உதவியுடன் பெயர் சரிபார்த்து வாக்களித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை
மொத்த வாக்குகளும் வரும் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதன் பிறகே 70 தொகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என்பது தெரியவரும். மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 762 என்பது குறிப்பிட்டத்தக்கது.
இருப்பினும் போட்டி களத்தில் மூன்று பெரும் கட்சிகள் மட்டுமே மக்கள் கவனத்தில் உள்ளனர்.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
தேர்தலுக்கு பின் கருத்துக்கணிப்பு நடத்திய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள முடிவில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளது.
மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி
இதில் ஆம்ஆத்மி 48 தொகுதிகளையும், பாஜக 21 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல மற்ற கருத்துக்கணிப்பும் இந்தியாடுடே, நியூஸ் எக்ஸ் போன்றவையும் ஆம்ஆத்மி முதலிடம் வகிக்கும் என்பதை தெரிவித்துள்ளது.
ஆட்சிக்கு வந்ததும் நல்லது செய்வதும், செய்த நல்லதை மட்டுமே கூறி வாக்கு சேகரிப்பதும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகுமா?பொறுத்திருப்போம் 11ம் தேதி வரை….