தாய்லாந்தில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி. ராணுவ வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் உயிரிழப்பு.
துப்பாக்கி சூடு
தாய்லாந்து பேங்காக்கின் வடகிழக்கு பகுதியில் 250 கி.மீ தொலைவில் உள்ள நாக்ஹோன் ரட்சசிமா நகரில் வணிக வளாகம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம்.
வணிக வளாகம் முன்பு காரில் வந்திறங்கிய ராணுவ வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பெண் ஒருவர் மீதும் முதலில் சுட்டுள்ளார்.
பின் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நோக்கி சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வணிக மையத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொன்ற அந்த நபரை பாதுகாப்பு துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் கொங்க்சீப் தந்திரவானி அடையாளம் காட்டியுள்ளார். கொலையாளியின் பெயர் ஜக்ராபந்த் தொம்மா (32) என்பது தெரியவந்துள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல தாக்குதல் நடித்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் கிரைம் ரேட்
இவர் ராணுவ முகாமில் இருந்து துப்பாக்கியை திருடி வந்துள்ளார். மேலும் அந்த நபர் வந்த காரும் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி அவர் சுட்டத்தில் வணிக வளாகத்தில் இருந்த கடை ஒன்றின் சிலிண்டர் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
மிக முக்கிய குற்றவாளியாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக் மூலம் தான் மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவும் மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு வருகிறார்.
விரைவில் அவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து விடுவோம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.