20 years of Hey Ram: ஹே ராம் படம் பற்றி ஒரு பார்வை. ஹே ராம் படத்தின் முக்கிய தருணங்கள் மற்றும் ஹேராம் படத்தின் சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பத்மஸ்ரீ கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்து 2000-ஆம் ஆண்டில் வெளிவந்த பகுதி வரலாற்று கற்பனைக் கதை கொண்ட திரைப்படம் ஹே ராம் வெளிவந்து இன்றுடன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது.
இதில் ஷாருக்கான், அதுல் குல்கர்னி, ராணி முகேர்ஜி, நசுரீதின் ஷா, வசுந்தரா தாஸ், சவ்ரவ் சுக்லா இன்னும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹேராம் கதைச் சுருக்கம்
ஹீரோ சகேத் ராம் தொல்பொருள் ஆய்வாளர், பெங்கால் கலவரத்தில் பாதிக்கப்பட்டு தன் காதலியை இழப்பார். இது அவருக்கு மத வெறுப்பை உண்டாக்கிவிடும்.
இந்தியாவில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் உயிர் இழப்புகளுக்கும் காந்தி தான் காரணம் என்று நம்புவார்.
இறுதியில் காந்தியுடன் இரண்டு மூன்று சந்திப்புகளுடன் அவர் முழுவதும் மாறிவிடுவார்.
இறுதியில் ராம் காந்தியின் மீதான வெறுப்பு போகி அவரின் பக்தன் ஆகி விடுவார். இதுவே இப்படத்தின் கதைச்சுருக்கம்.
ஹேராம் படத்தின் முக்கியத் தருணங்கள்
இப்படத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்த அபையங்கார் ஸ்ரீராம் (அதுல் குல்கர்னி) சிறந்த நடிப்பை வெளிப்படித்தி இருப்பார். சாகேத் ராம்கு காந்தி மீது இவ்வளவு வெறுப்பு வார காரணமும் இவர்தான்.
இந்தியாவில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் காந்தி தான் காரணம் என்று நம்ப வைப்பார். ஒரு காட்சியில் அபையங்கார் ஸ்ரீராம் கூறும் வசனம் ‘there is one man behind all this, barrister Mohandas Karamchand Gandhi’.
மேலும் கிலாபாத் இயக்கத்திற்கும் காந்தி தான் காரணம் என்று கூறியும் மூளைச்சலவை செய்வார். இவையே சாகேத் ராம் காந்தியை கொள்ள நினைப்பதற்கு உந்துக்கோளாக அமைந்தது.
படத்தின் இறுதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 7-ஆம் வருடத்தில் சாகும் தருணத்தில் இருக்கும் சாகேத் ராம் இந்து முஸ்லிம் கலவரத்தைப் பார்த்து இன்னும் இந்த சண்டைகள் முடியவில்லையா என்று உயிர் நீப்பார்.
ஹே ராம் படத்தின் சில சுவாரசியமான தகவல்கள்
ஹேராம் படம் ரிலீஸ் ஆகி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இப்படம் இந்திய தேசியத் தலைவரை இழிவாக எடுத்துரைப்பதாக இடம்பெற்ற அரசியல் காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இப்படம் தமிழுக்கு பிறகு ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படத்தில் வசனங்கள் மூன்று மொழிகளிலும் கலந்து கலந்து வந்தது. இது வணிக ரீதியில் இப்படம் தோல்வியுறக் காரணமாக அமைந்தது.
மேலும் இப்படம், non linear முறையில் கதை எடுத்து சொல்லப்பட்டதும் சில ஆபாசக் காட்சிகளும் கூட ஹே ராம் தோல்வியுற மற்றொரு காரணம்..
இந்தியாவில் ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இறுதிப் பட்டியலில் இது இடம்பெறவில்லை.
இப்படம் மூன்று தேசிய விருதுகளும் ஒரு ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றது. சப்போர்டிங் ரோல் நடித்த அதுல் குல்கர்னிக்கு தேசிய விருதும் கமல்ஹாசனுக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.
இப்படத்தில் சுருதிஹாசன், சர்தார் வல்லபாய் பட்டேல் மகளாக நடித்துள்ளார். இப்படத்திற்கு சம்பளமாக ஷாருக்கான் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லையாம்.