Home சினிமா கோலிவுட் Change in kollywood: கதை ஒருவர்! இயக்கம் வெறொருவர்!

Change in kollywood: கதை ஒருவர்! இயக்கம் வெறொருவர்!

282
0
Change in kollywood கதை ஒருவர்

Change in kollywood: கதை ஒருவர்! இயக்கம் வெறொருவர்! கோலிவுட் என்கிற தமிழ் சினிமா பல புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

நமது தமிழ் சினிமாக்களில் இப்போது, கதையை ஒருவர் எழுதுகிறார்; மற்றொருவர் அக்கதையை திரைப்படமாக இயக்குகிறார்.

Change in kollywood இவ்வாறான நிகழ்வு நம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றே! இந்நிகழ்வுகளுக்கான உதாரணங்களை இக்கட்டுரையில் காண்போம்.

உலகநாயகனே முதல் உதாரணம்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த யூக்தியை எப்போதே தொடங்கிவிட்டார். ஆம்! இவர் எழுதிய பல கதைகள் வெவ்வேறு இயக்குனர்களால் படமாக்கப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனர்களும் இவரின் கதையைப் படமாக இயக்கிய வரலாறும் உண்டு.

விக்ரம், ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், மகாநதி, மகளிர்மட்டும், குருதிப்புனல், ஆளவந்தான், பஞ்சதந்திரம், நளதமயந்தி, மன்மதன் அம்பு, தூங்காவனம், உத்தமவில்லன், தசாவதாரம் போன்ற படங்களின் கதையெல்லாம் கமல்ஹாசனால் எழுதப்பட்டு வேறுநபர்களால் இயக்கப்பட்டது.

கமல்ஹாசன் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டிருந்ததை, நம் தமிழ் சினிமா சமூகம் கடந்த சில காலங்களாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இது நிச்சயமாக தமிழ் சினிமாவின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உதவும்.

தற்போது நம் தமிழ் சினிமாத்துறையில், “கதை ஒருவர்! இயக்குனர் வெறொருவர்!” என்ற வகையை அவ்வப்போது காணமுடிகிறது. மேலும் இவ்வகை வளர்ந்தும் கொண்டிருக்கிறது.

அசுரன்

சென்ற வருடம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற அசுரன் படம் மிகச்சிறந்த உதாரணம் .

பூமணி என்பவர் எழுதிய ‘வெக்கை’  எனும் நாவலை, இரண்டரை மணி நேரத்திற்கு ஏற்ற திரைக்கதையாக வடிவமைத்து திரைப்படமாக இயக்கினார் வெற்றிமாறன்.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் அவர்கள் தன்னுடைய கனவுப்படம் என்று சொல்லி எடுத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படமும் இவ்வகையைச் சார்ந்ததுதான்.

கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் எனும் கதையைத்தான் தற்போது, திரைப்படத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

மேலே சொல்லப்பட்ட அசுரனும், பொன்னியின் செல்வனும் ஒரு நாவலை திரைப்படமாக மாற்றிய வகையைச் சார்ந்தது.

நீதானே என் பொன்வசந்தம் & குயின்

ஜிவா, சமந்தா நடித்த “நீதானே என் பொன்வசந்தம்” திரைப்படத்தின் கதையை ரேஷ்மா என்பவர் எழுதினார். கெளதம் வாசுதேவ் மேனன் அவர்கள் அக்கதையை திரைப்படமாக  இயக்கினார்.

தற்போது MX பிளேயரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “குயின்” வெப்-சீரிஸின்  கதையும் வெறொருவரால் எழுதப்பட்டு பின்பு அக்கதை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி பட இயக்குனர் பிரசாத் அவர்களால்  இயற்றப்பட்டதுதான்.

மான்கராத்தே

மான்கராத்தே  திரைப்படம் மேலே சொன்ன படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டது.

மான்கராத்தே திரைப்படத்தின் கதை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களால் எழுதப்பட்டது .

ஆம்! முருகதாஸ் அவர்கள் எழுதிய இக்கதையை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திருக்குமரன் அவர்களால் திரைப்படமாக இயக்கப்பட்டது.

வானம் கொட்டட்டும்

சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் கதை புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் அவர்களால் எழுதப்பட்டது.

அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தனசேகரன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

முன்னனி இயக்குனர்களான மணிரத்னம், வெற்றிமாறன், முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர்கள் இச்செயல்களை செய்வது; வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இப்படி படத்திற்காக கதை ஒருவர் எழுதுவதோ அல்லது எழுதிய கதைகளை மற்றொருவர் திரைப்படமாக இயக்குவதோ ஆரோக்கியமான விஷயம் .

ஏனெனில் அப்போதுதான் நிறைய புதுச்சிந்தனைகள் பிறக்கும் அதிக எழுத்தாளர்கள் முன்னேறுவார்கள்.

ரசிகர்களுக்கு புதுவித திரையனுபவம் கிடைக்கும். இனி வரும் காலங்களில் “கதை ஒருவர், இயக்கம் வெறொருவர்” என்ற பாணி அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous articleகுடும்ப வன்முறை சட்டம்; பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
Next articleNZ vs IND 3rd T20: நியூசிலாந்துக்கு ரிவீட் அடித்த இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here