அஜித்தின் 21 வயது மகள்; எப்படி சாத்தியம்?
அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகிய பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். அஜித் இந்தப் படத்தில் வக்கீலாக நடிக்கிறார். பிங்க் படத்தில் இல்லாத இரண்டு கேரக்டர்களை தமிழில் புதிதாக சேர்த்துள்ளார் இயக்குனர் வினோத்.
அஜித் மனைவி மற்றும் மகள் என இரண்டு கதாப்பாத்திரம் தமிழுக்காக சேர்த்துள்ளனர். மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார்.
மகளாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இதெப்படி சாத்தியம். இரண்டு கதாப்பாத்திரங்கள் புதிதாக சேர்த்தால் மெயின் கதை மாறிவிடாதா? எனக் குழப்பம் வரலாம்.
மகள் மற்றும் மனைவி கதாப்பாத்திரங்கள் கெஸ்ட்ரோல் போன்றே இருக்கும். அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அதேவேளை பேசும் படியான கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளாராம் வினோத்.
ஸ்ரீதேவியின் மகளுக்கு பாலிவுட்டில் வரவேற்ப்பு இல்லை. எனவே அம்மாவைப்போல தமிழில் கலக்க முடிவு செய்துள்ளார்.
ஸ்ரீதேவி தமிழில் அறிமுகமாகி பாலிவுட் சென்றார். அவருடைய மகள் பாலிவுட்டில் அறிமுகமாகி தமிழுக்கு வருகிறார்.