ஜம்மு-காஷ்மீரில் 35 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து முப்பத்தைந்து புதிய கொரோனா நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த எண்ணிக்கையில் 640 தொற்றுகள் காஷ்மீரிலும், 61 தொற்றுகள் ஜம்முவிலும் பதிவாகியுள்ளன.
இங்கு இதுவரை 287 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் இறந்துள்ளனர். 406 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசாங்க கண்காணிப்பு மற்றும் வீட்டு கண்காணிப்பு என உள்ளவர்களின் எண்ணிக்கை 74000 ஆக உள்ளது. இதில் chest diseases சென்டரில் பரிசோதிக்கப்பட்ட 846 மாதிரிகளும் அடங்கும்.
ஒரு நாளில் 2500 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் இதுவரை, நுண்ணுயிரியல் துறையால் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் 846 என்ற எண்ணிக்கைதான் அதிகம் என்று அந்த மருத்துவமனையில் இருதய மருத்துவ துறைத் தலைவர் நவீத் நசீர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.