Home Latest News Tamil தமிழ்நாட்டில் 3,509 புதிய தொற்றுகள் இன்று கண்டறியப்பட்டன, 45 பேர் கொரோனாவால் இறந்தனர்

தமிழ்நாட்டில் 3,509 புதிய தொற்றுகள் இன்று கண்டறியப்பட்டன, 45 பேர் கொரோனாவால் இறந்தனர்

புதிய தொற்றுகள்

சென்னை: தமிழ்நாட்டில் வியாழன் 45 பேர் கொரோனாவால் இறந்தனர். 3,509 புதிய தொற்றுகள் இன்று கண்டறியப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக உள்ளது. மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 70,997 ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர் மற்றும் 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

1,834 தொற்றுகள் சென்னையில் மட்டும் கண்டறியப்பட்டன

இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,358 பேரில் 1,834 தொற்றுகள் சென்னையில் மட்டும் கண்டறியப்பட்டன. செங்கள்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கலில் 459 தொற்றுகள் கண்டறியப்பட்டன.

மதுரையில் 203 தொற்றுகளும், வேலூரில் 168 தொற்றுகளும் மற்றும் இராமனாதபுரத்தில் 140 தொற்றுகளும் வியாழன் உறுதி செய்யப்பட்டன.

29 பேர் அரசு மருத்துவமனைகளில் இறந்தனர்

கொரோனா பாதித்த 29 பேர் அரசு மருத்துவமனைகளில் இறந்தனர், 16 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர். இதில் 3 பேர் கூடுதலாக நோய்களை கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here