கொரோனா வைரஸ் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவை வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கடந்த மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பரவி பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்து வருகிறார்கள்.
பல நாட்டு அரசாங்கங்கள் இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகிறார்கள்.
இந்திய பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு வீட்டில் உள்ளேயே 21 நாள் இருக்கும்படி சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இருந்தாலும் மக்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் சில இடங்களில் சுற்றி வருகிறார்கள்.
இதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை நன்றாகவே கையாண்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களுக்கு சேவை செய்வதிலும் மும்முரமாக இருந்து வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு வீட்டு கண்காணிப்பு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டினுள்ளேயே சுயகட்டுப்பாடு வேண்டும் என்று அறிவுறுத்த பட்டிருந்தார்கள்.
மீறுவோர் மீது கடும் நடவடிக்கை, பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேர் சென்னையில் வெளியில் சுற்றித் திரிந்து வந்துள்ளனர்.
இன்று கோயம்பேடு சேர்ந்த இருவரும், அண்ணாநகரை நகரை சேர்ந்த ஒருவரும் வெளியில் சுற்றி திரிந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த உத்தரவை மீறியதால்
அவர்களை போலீசார் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருப்பார்கள்.