Home சினிமா கோலிவுட் HappyBirthdayDhoni: ஆர்ஜே பாவனா பாடிய தல ஸ்டோரி தோனி வெர்ஷன்!

HappyBirthdayDhoni: ஆர்ஜே பாவனா பாடிய தல ஸ்டோரி தோனி வெர்ஷன்!

394
0
Master Kutty Story Dhoni Version

Master Kutty Story Dhoni Version; ஆர்ஜே பாவனா பாடிய குட்டி ஸ்டோரி தோனி வெர்ஷன்! தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் உள்ள குட்டி ஸ்டோரி பாடலை தோனி வெர்ஷனில் பாடி ஆர்ஜே பாவனா வெளியிட்டுள்ளார்.

தோனி வெர்ஷனில் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலை பாடி அதனை நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

தொடர்ந்து கொரோனா காரணமாக தாமதமாகிக் கொண்டிருப்பதால், அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது மாஸ்டர் படத்தின் மீது விழுந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு பெற்றது. அதில், மாஸ்டர் குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் யூடியூப்பில் நல்ல வியூஸ் பெற்று வருகிறது.

இந்த நிலையில், கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில், தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் வகையில், நிகழ்ச்சி தொகுப்பாளரும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்ஜேவுமான பாவனா, தோனி வெர்ஷனில் குட்டி ஸ்டோரி பாடலை பாடியுள்ளார்.

அதனை வெளியிட்டு, HappyBirthdayDhoni என்று அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தற்போது மாஸ்டர் குட்டி ஸ்டோரியின் தல வெர்ஷன் ஸ்டோரி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Previous articleதோனியா தல? டுவிட்டரில் டிரெண்டாகும் #RealBrandTHALAAjith ஹேஷ்டேக்!
Next articleமரக்கானத்தில் 4 அடி உயர விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது: விழுப்புரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here