Home சினிமா கோலிவுட் மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

656
0
Simbu and Jason Abi

Simbu Latest Photo; மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு: வைரலாகும் புகைப்படம்! தனது சகோதரி மகன் ஜேசன் அபியின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சகோதரி மகனின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார்.

சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

படக்குழுவினரும் சென்னை திரும்பினர். இதன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது உடல் எடை குறைந்த நிலையில், மருமகன், தங்கை மகன் ஜேசன் அபியுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

ஆம், மருமகன் ஜேசன் அபிக்கு நேற்று பிறந்தநாள். இதனை முன்னிட்டு கேக் வெட்டி, அவரது பிறந்தநாளை சிறப்பித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், சிம்பு திருமணம் பற்றி வதந்தி பரவியது. சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த தூரத்து உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு டிஆர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, சிம்பு மற்றும் த்ரிஷாவிற்கும் திருமணம் என்று வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan TR

Previous articleVirat Kohli: தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு!
Next articleஒரு வாரத்தில் 5 மில்லியன் வியூஸ் பெற்ற காட்டுப் பயலே பாடல் லிரிக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here