Home சினிமா கோலிவுட் மாப்பிள்ளை அவருதான்…. டிரெஸ் என்னோடது: ரஜினியின் பேச்சு!

மாப்பிள்ளை அவருதான்…. டிரெஸ் என்னோடது: ரஜினியின் பேச்சு!

498
0
Rajinikanth Politics

Rajinikanth; ரஜினியை வச்சு அரசியல் செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும் என்பதை இலவு காத்த கிளி ரஜினி, பயந்துட்டியா கொமாரு டுவிட்டர் ஹேஷ்டேக் மூலமாக தெரிந்திருக்கும்.

சார், நீங்க எப்போ சார் அரசியலுக்கு வருவீங்க? அரசியலுக்கு வந்தா சொல்லி அனுப்புங்க? உங்க கட்சில சேரணும் சார் என்று எல்லாம் தற்போது மீம்ஸ் வந்து கொண்டே இருக்கிறது.

ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தனது ஆன்மீக அரசியல் (Rajini Politic Entry) குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு பொதுவெளியில், செய்தியாளர்களை சந்தித்து அவ்வப்போது தமிழக அரசியல் குறித்து விமர்சித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், அதில், தனக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை (Rajini Press Meet) சந்தித்து பேசினார்.

அதில், தனக்கு முதல்வர் பதவி ஆசை இல்லை என்று குறிப்பிட்ட ரஜினி, இனிமேல் வருங்கால முதல்வர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. தான், கட்சிக்கு தலைமையாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

இது ரஜினி ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் பலரும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு அளித்தனர்.

எனினும், இப்போதும் ரஜினி கட்சி பற்றி அறிவிக்கவே இல்லை. எழுச்சி, புரட்சி வரட்டும். அதன் பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரது வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

நாம் தான் இன்னும், அவர் என்ன பேசுவாரு? எப்போது அரசியலுக்கு வருவார் என்று விழி மீது விழி வைத்து பார்த்தும் காத்தும் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், இலவு காத்த கிளி ரஜினி, பயந்துட்டியா கொமாரு ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இலவு காத்த கிளி ரஜினி டுவிட்டர் ஹேஷ்டேக்கில் மீம்ஸ்களை உருவாக்கி விதவிதமான டயலாக்குகளை பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.

இந்த இரு ஹேஷ்டேக்குகள் இன்னனும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. Rajinikanth Press Meet என்ற ஷேஷ்டேக்கும், சர்கார் கிளைமேக்ஸ் காட்சியும் டிரெண்டாகி வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

SOURCER SIVAKUMAR
Previous articleரஜினியைப் போன்று அரசியலுக்கு வரும் ரோபோ சங்கர்: அப்படியே சொல்லு!
Next article13/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here