Home சினிமா கோலிவுட் குடும்பத்துடன் மாயமானார் நடிகர் அஜித்! – பரம ரகசியம்

குடும்பத்துடன் மாயமானார் நடிகர் அஜித்! – பரம ரகசியம்

1223
0
குடும்பத்துடன் மாயமானார்

குடும்பத்துடன் மாயமானார் நடிகர் அஜித்! – பரம ரகசியம்

நடிகர் அஜித் வீடு சென்னை திருவான்மியூரில் இருந்தது. அங்கு அவ்வபோது ஏராளமான அஜித் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

அதன்பிறகு அஜித், சுவரின் உயரத்தைக் கூட்டினார். அப்படியும் ரசிகர்கள் விடுவதாய் இல்லை. காலை முதல் மாலை வரை காத்துகிடந்த ரசிகர்கள் கூட உண்டு.

சமீபகாலமாக அஜித் அந்த வீட்டில் இல்லை. அவர் வீட்டைக்காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அஜித் குடும்பத்துடன் புதிய வீட்டிற்குச் சென்றுவிட்டார். தற்பொழுது அவர் எந்த வீட்டில் வசிக்கிறார் என்பது எந்த நடிகர்களுக்கும் தெரியாது.

திரைத்துறையில் உள்ள எவருக்கும் தெரிந்துவிடாதபடி ரகசியமாக, சத்தமில்லாமல் புதிய வீட்டில் குடியேறிவிட்டார்.

காரணம், ஒருவருக்கு தெரிந்துவிட்டால் காத்துவாக்கில் ஒவ்வொரு நடிகருக்கும் தெரிந்துவிடும்.

பின்பு திரைத்துறையில் கசிந்துவிடும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் காதிற்குச் சென்றுவிடும்.

அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் புதிய வீட்டிலும் ரசிகர்கள் தொல்லை அதிகமாகிவிடும்.

அவர்களை தவிர்க்கவும் மனமில்லை விரும்பிப் பார்த்தால் தமிழகமே படையெடுத்து வந்து விடும்.

எனவே தர்ம சங்கடமாகிவிடும். இதைத் தவிர்ப்பதற்காகவே வீட்டை மாற்றியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பல திரைப்பிரபலங்கள் விழாக்களுக்கு அழைக்க முயற்சித்துள்ளனர். அவர் வீடு மாற்றிய விஷயமே அதன்பிறகு தான் வெளியில் கசிந்துள்ளது.

தமிழ்சினிமா வட்டாரத்தில் துருவித்துருவி விசாரணை செய்தும் பலரும் தெரியவில்லை என்று தான் கூறி உள்ளனர்.

அஜித் குடும்பத்துடன் மயமாகி, தனித்து வசித்து வருகிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்றால் படப்பிடிப்பில் மட்டுமே சாத்தியம்.

Previous articleகனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு!
Next articleஉலகக்கோப்பை: எந்தநிலையிலும் இறங்கி அடிக்கத் தயார்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here