அஜித் லெட்டர்: விஜய்யைக் குத்திக்காட்டினாரா?
அஜித் படத்தில் தவிர, நேரில் பேசிவதை நிறுத்தி பல கலாம் கழிந்துவிட்டது. தற்பொழுது திடீரென அஜித்திடம் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
தன்னுடைய அரசியல் முடிவைப்பற்றி தெளிவாக விளக்கி ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் உள்ள சில வரிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
அந்த சர்சைக்கு உரிய வரிகள், “நான் சினிமாவில் தொழில் முறையில் வந்தவன். நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை.
அரசியல் சார்ந்த எந்த வெளிப்பாட்டையும் நான் ரசிகர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை.
மற்றவர்கள் கருத்தை என்மீது திணிக்கவிட்டது இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் நான் எதிர்பார்கிறேன்” எனக் குறிபிட்டுள்ளார்.
இந்த வார்த்தையை விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெசலாக அஜித் கூறியுள்ளார் என சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்து விட்டது.
அரசியல் பேராசை நடிகர். சொந்த விருப்பத்திற்காக ரசிகர்களை வளர்கிறார். ரசிகர் மன்றம் வைத்துள்ளார் என சிலர் ட்விட்டரில் அஜித் லெட்டரை இணைத்து வெளியிட்டுள்ளனர்.
அஜித் இதை பொதுவாக குறிப்பிட்டு இருக்கவே வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சர்சையை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படி பண்ணினா, பின்ன எப்படி இந்த மனுஷன் வாய் திறப்பாரு. வாய் திறந்தாலே அதுவே ஒரு சர்ச்சை ஆயிடும் போல.