Home சினிமா கோலிவுட் Loversகளுக்கு முன்னுதாரணம் தல அஜித் – ஷாலினி ஜோடி!

Loversகளுக்கு முன்னுதாரணம் தல அஜித் – ஷாலினி ஜோடி!

521
0
Ajith Shalini

Ajith Shalini; Loversகளுக்கு முன்னுதாரணம் தல அஜித் – ஷாலினி ஜோடி! சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் காதலிக்கும் ஜோடிகளுக்கு முன்னுதாரணமாக தல அஜித் மற்றும் ஷாலினி ஜோடி திகழ்கின்றனர்.

காதலிக்கும் ஆண், பெண்களுக்கு முன் உதாரணமாக அஜித் – ஷாலினி ஜோடியும், அவர்களது காதல் வாழ்க்கையும் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அனைவருமே ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த காதல் ஜோடியாக இருப்பது அஜித் – ஷாலினி. இவர்களுக்கு சிறந்த காதல் ஜோடிக்கான பட்டங்கள் கொடுக்கலாம்.

காதல் திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வந்தால் அஜித் – ஷாலினி திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிறது.

ஹலோ ஹேஷ்டேக்

அஜித் – ஷாலினியின் திருமண நாள் வருவதை முன்னிட்டு ஹலோ ஹேஷ்டேக்கில் AjithShaliniBestCouple👩‍❤️‍👨, AjithShaliniLoveStory❤️❤️, AjithShaliniPhotos, அஜித் ஷாலினி பாடல்கள் 💕🎼, AjithShalini👩‍❤️‍👨, AjithShaliniSongs💕🎼, AjithShaliniLoveScenes❤️🎬, AjithShaliniRoleModelCouple👩‍❤️‍👨 ஆகியவை டிரெண்டாகி வருகிறது.

அஜித் ஷாலினி சிறந்த காதல் ஜோடி, அஜித் ஷால்னி காதல் கதை, அஜித் ஷாலினி புகைப்படங்கள், அஜித் ஷாலினி பாடல்கள், அஜித் ஷாலினி, அஜித் ஷாலினி காதல் காட்சிகள், அஜித் ஷாலினி ரோல் மாடல் ஜோடி என்று ஹலோவில் ஹேஷ்டேக் உருவாக்கி அஜித் ஷாலினி பற்றி கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Shalini Ajith Best Couple

திரையுலகில் காதல் திருமணம் செய்த பல பிரபலங்களுக்கு முன்னுதாரணம் தல அஜித் ஷாலினி ஜோடியே.  வருகிற ஏப்ரல் 24 அன்று திருமண நாளை கொண்டாடும் அஜித் ஷாலினி ஜோடி பற்றிய உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவல்களையும், உங்களது வாழ்த்துக்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள Hashtags-ஐ பயன்படுத்தி பதிவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அமர்க்களம்

தல ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும், அஜித்தின் காதல் வாழ்க்கை. ஆம், அமர்க்களம் படத்தின் மூலமாகவே அஜித் – ஷாலின் காதல் வாழ்க்கை தொடங்கியது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை. குழந்தை நட்சத்திரமாகவே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

காதலுக்கு மரியாதை

ஹீரோயினாக அறிமுகமானது என்னவோ விஜய்யின் காதலுக்கு மரியாதை. இதுதான் தமிழிலும் ஷாலினிக்கு முதல் படம்.

இரண்டாவது படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார். அதுதான் அமர்க்களம். அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை ஆரம்பமானதும் அந்த படத்தில்தான்.

அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை

இயக்குநர் சரண் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்கு ஷாலினியிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அஜித் நேரடியாக பேசவே அவரது மரியாதைக்காக ஷாலினியும் ஒப்புக் கொண்டுள்ளார்.

Ajith Shalini Amarkkalam

ஷாலினி ரத்தக் காயம்

படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. அதுவரை ஷாலினி மீது காதல் வராத அஜித்திற்கு அவருக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்தும், அவரது பக்குவத்தைப் பார்த்தும் காதல் வந்துள்ளது.

அமர்க்களம் படத்தில் ஏற்பட்ட விபத்து

அமர்க்களம் படத்தில் ஏற்பட்ட விபத்து, படத்தின் காட்சிப்படி, சீனிவாசா தியேட்டரில் ஓடும் அண்ணாமலை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஷாலினி எடுத்து வந்து தனது வீட்டில் வைத்துக் கொள்வார். அப்போது, அவரிடம் இருந்து கிளைமேக்ஸ் காட்சி பெட்டியை வாங்க அஜித் கோபத்துடன் கையில் கத்தியோடு ஷாலினி வீட்டிற்கு வருவார். கோபத்தோடு, ஷாலினியுடன் சண்டை போட்டு கிளைமேக்ஸ் படப்பெட்டியை பிடுங்குவார். இது தான் சீன்.

அஜித் கூச்சல் – மருத்துவ வசதி

அந்த காட்சியின் போது, அஜித் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து வீசுவார். அது, ஷாலினி கையில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது.

ஒட்டு மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடையவே ஷாலினி மட்டும் ரொம்பவே கூலாக இருந்துள்ளார். ஆனால், நம்ம தல சும்மா இருப்பாரா? இல்லவே இல்லை. கூச்சலிட்டுள்ளார். அவர் கூச்சலிட்டதில் மருத்துவமனையே செட்டுக்கு வந்துள்ளது.

அதன் பிறகு ஷாலினி ஷூட்டிங்கிற்கு வரவே மாட்டார் என்று நினைத்துளனர். ஆனால், இது குறித்த அறிந்த ஷாலினியின் அப்பா உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.

ஷாலினியின் அப்பா பாராட்டு

வந்தவர், சிறு வயதிலிருந்தே படப்பிடிப்பின் போதோ அல்லது படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்திலோ ஷாலினிக்கு ரத்தம் காயம் ஏற்பட்டாலோ அந்த படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும். அதே போன்று தற்போது அமர்க்களம் படத்திலும் நேர்ந்துள்ளது. ஆதலால், இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று பாராட்டு தெரிவித்தார்.

காதலிக்கும் காட்சி

அஜித், ஷாலினியை காதலிப்பதாக கூறும் காட்சி. ஆம், ஷாலினியை பார்க்க வரும் அஜித், அவருக்கு பூங்கொத்து கொடுப்பார்.

இதைக் கேள்விப்பட்ட அஜய் தனது பணத்தில் பூங்கொத்து வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் ஷாலினியின் அப்பா யாருக்கு இந்த பூங்கொத்து என்று அஜித்திடம் கேட்டுள்ளார். இதற்கு, அஜித் பயந்து கொண்டு இது நடிகர் மாதவன் தனது காதலிக்காக வாங்கியது என்று கூறி சமாளித்துள்ளார்.

எனினும் ஷாலினிக்கு பூங்கொத்து கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித் வேண்டுகோள்

சீக்கிரமே படத்தை எடுத்து முடிச்சிருங்க சார். இல்லை என்றால் இந்த பொண்ணை நான் காதலிச்சிருவேனுக்கு பயமாக இருக்கு என்று தன்னிடம் கூறியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அஜித் பிறந்தநாள் – ஷாலினி கிப்ட்

இதே போன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு இயக்குநர் சரண் அஜித்தை தொடர்புகொண்டு ஷாலினியை பேச வைத்துள்ளார்.

அப்போது பேசிய ஷாலினி உங்கள் வீட்டு வாசலில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று திறந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

அஜித்தும் அவர் கூறியதைக் கேட்டு வீட்டு கதவை திறந்து பார்த்து அதிர்ச்சியடைள்ளார்.

ஏனென்றால், அஜித்திற்கு பிடித்த அனைத்தும் அவர் வீட்டு வாசலில் இருந்துள்ளது. இப்படியே இருவரது காதலும் மலர்ந்துள்ளது.

அஜித் காதல் புரோபோஷ்

ஒரு கட்டத்தில் நேரடியாக ஷாலினியிடம் அஜித் தனது காதலை வெளிப்படுத்தியதோடு, திருமணம் செய்து கொள்ளவும் ஆசையிருப்பதாக கூறியுள்ளார்.

அப்போது, ஷாலினிக்கும் அஜித் மீது காதல் இருந்துள்ளது. ஆதலால், ஷாலினியும் யோசிக்காமல் ஓகே சொல்லியுள்ளார்.

அதோடு தான் அப்பா செல்லம் என்பதால், அப்பாவிடம் சம்மதம் வாங்கும்படி கூறியுள்ளார்.

அஜித் ஷாலினி திருமணம்

உடனே அஜித் ஷாலினியின் பெற்றோரை சந்தித்து சம்மதம் வாங்கியுள்ளார். அப்புறம் என்ன, இருவீட்டார் சம்மதத்துடன் அஜித் தனது காதலி ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்தார்.

சினிமாவின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருப்பது என்னவோ தல அஜித் – ஷாலினி.

Shalini Marriage

அமர்க்களம் மூலம் காதல் வாழ்க்கையை தொடங்கிய அஜித்துக்கு பக்கபலமாக ஷாலினி இருந்து வருகிறார். ஒரு ஆணின் வெற்றிப் பிறகு ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவது உண்டு. அப்படி அஜித்தின் வாழ்க்கையில் வந்த ஷாலினி அஜித்தின் ஒவ்வொரு அசைவிலும் அவருக்கு உறுதுணையாகவே இருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து ஷாலினி விலகியுள்ளார்.

அஜித் மகன், மகள்

அஜித் – ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்க்களம் படத்திற்குப் பிறகு அஜித், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், உன்னை கொடு என்னை தருவேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ரெட், வில்லன், என்னை தாலாட்ட வருவாளா, வரலாறு, பில்லா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எல்லாமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஜி-20 நாடுகளிலேயே அதிகபட்ச வளர்ச்சியில் இந்தியா-IMF !
Next articleசீனாவின் வுகான் நகரம் பலி எண்ணிக்கை 50% அதிகரிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here