ஏ.எல் விஜய் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏ.எல் விஜய் மற்றும் மருத்துவரான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடந்தது.
தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் இளைய மகன் தான் ஏ.எல் விஜய். இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் அஜித் நடிப்பில் கிரீடம் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.
அதற்குப்பின்னர் மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தேவி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.எல் விஜய். தெய்வத்திருமகள் படப்பிடிப்பின்போது இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என செய்திகள் வெளிவந்தன.
அதன் பின்னர் தலைவா திரைப்படம் வெளியான பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் ஏ.எல் விஜய் மற்றும் அமலாபால் இருவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மூன்று ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் சென்னையில் விஜய் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்தது.
தற்போது இவர்கள் இருவரும் அப்பா-அம்மாவாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.