டுவிட்டரில் டிரெண்டான அன்புள்ள சூர்யா! கடந்த சில தினங்களாக சூர்யா பற்றிய செய்தி வந்து கொண்டே இருக்கும் நிலையில், டுவிட்டரில் அன்புள்ள சூர்யா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
அன்புள்ள சூர்யா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிப்பதைத்த் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி கொடுத்து வருகிறார்.
அதோடு, உதவி என்று வந்தால் ஓடோடி உதவி செய்யக்கூடியவர். தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சூர்யா பற்றிய செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ஒன்று, சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ.
இந்தப் படத்தின் வெய்யோன் சில்லி யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இதையடுத்து, சூர்யா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவலைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இனிமே, பொன்மகள் வந்தாள் படத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் படமோ வெளியானால் அது நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் தான் வெளியாகும்.
திரையரங்கில் வெளியிடப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தான் டுவிட்டரில் அன்புள்ள சூர்யா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்டானது.
ஏன் என்று பார்த்த போதுதான் சூர்யாவைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்ததைத் தொடர்ந்து இது போன்று அன்புள்ள சூர்யா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.
அதோடு, சூரரைப் போற்று படத்தின் மூலமாக சூர்யா 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் என்பதையும் ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை பகிர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.