Home சினிமா கோலிவுட் நிமிர்ந்து நில், தனி ஒருவன் புகழ் நடிகர் அனில் முரளி திடீரென்று காலமானார்!

நிமிர்ந்து நில், தனி ஒருவன் புகழ் நடிகர் அனில் முரளி திடீரென்று காலமானார்!

365
0
Anil Murali Died Passed Away

Anil Murali Passed Away; நிமிர்ந்து நில் புகழ் நடிகர் அனில் முரளி திடீரென்று காலமானார்! தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்த நடிகர் அனில் முரளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அனில் முரளில் திடீரென்று உயிரிழந்துள்ளார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகர் அனில் முரளி (56). கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் வினயன் இயக்கத்தில் வந்த கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் 6 மெழுகுவர்த்திகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், தனி ஒருவன் ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும், கணிதன், அப்பா, கொடி, எங்க அம்மா ராணி, மிஸ்டர் லோக்கல், வால்டர், ஜீவி, நாடோடிகள் 2, நாகேஷ் திரையரங்கம், தொண்டன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் வில்லனாகவும், காவல் துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார். நிமிர்ந்து நில் படத்தில் அமலா பாலுக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Kadamattathu Kathanar, Sindhooracheppu, Chakravakam, Kadamatathachan, Swamiye Saranam Ayyappa, Akashadoothu ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அனில் முரளியின் மறைவு மலையாளம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனில் முரளியின் திடீர் மறைவுக்கு மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனில் முரளிக்கு சூமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் இருக்கிறார்கள்.

Previous articleடுவிட்டரில் டிரெண்டாகும் Lift ஹேஷ்டேக்: காரணம் தெரியுமா?
Next articleஆடி மாத தரிசனம் 14: உற்சவரே மூலவராக உள்ள கொப்புடையம்மன் கோவில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here