புல்வாமா தாக்குதல்: துணிச்சலாக களத்தில் குதித்த பாகிஸ்தான் பெண்
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் மீது இந்திய மக்களுக்கு கூடுதல் வெறுப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானியர்கள் பலர் இந்த தாக்குதலை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் செஹிர் மிர்ஸா என்ற பெண் #AntiHateChallenge என்ற ஹேஸ்டாக்கை உருவாக்கியுள்ளார்.
அந்த ஹேஸ்டாக்கில், ‘நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன்’ என்று எழுதிய பதாகையுடன் ட்விட் செய்துள்ளார்.
மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என #AntiHateChallenge, #NotoWar, #WeStandWithIndia, #CondemnPulwamaAttack போன்ற ஹேஸ்டாக்குகளை உருவாக்கி இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தானியப் பெண்கள் பலர் அதேபோன்று பதாகைகளுடன் ட்விட் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானியர்கள் பலர் தாக்குதலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நிலையில் பெண் ஒருவர் துணிச்சலாக தாக்குதலை எதிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.