Home சினிமா கோலிவுட் சூப்பர் ஹிட் கொடுத்த அஞ்சாதே படத்தின் பார்ட் 2வில் அருண் விஜய்?

சூப்பர் ஹிட் கொடுத்த அஞ்சாதே படத்தின் பார்ட் 2வில் அருண் விஜய்?

333
0
Arun Vijay In Anjathe 2

Anjathe 2 Arun Vijay; அஞ்சாதே 2 படத்தில் அருண் விஜய்? ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றவர் நடிகர் அருண் விஜய்.

இப்படத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டும், புகழும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அண்மையில், இவரது நடிப்பில் மாஃபியா படம் வெளியானது. விரைவில், இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் மிஷ்கின்.

இவர், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார். லண்டனில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

இதன் காரணமாக துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் தான் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளதாக விஷால் தெரிவித்தார்.

இதையடுத்து, சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர், படங்களில் பிஸியாக இருப்பதால், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சிம்பு சொல்லிவிட்டாரம்.

பிறகு என்ன செய்வது என்று யோசனையில் இருக்கும் போது தான் அருண் விஜய்யை சந்தித்து படம் இயக்கும் முடிவு குறித்து அவரிடம் பேசியிருக்கிறாராம்.

அருண் விஜய்யும் இதற்கு ஓகே சொல்ல, பட பணிகளில் மிஷ்கின் ஈடுபட்டுள்ளார். மிஷ்கின் – அருண் விஜய் காம்பினேஷனில் உருவாகும் படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.

நரேன், பிரசன்னா, அஜ்மல் அமீர், விஜயலட்சுமி ஆகியோரது நடிப்பில் வந்த அஞ்சாதே படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படம். ஆகையால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅரைகுறை ஆடையுடன் கிளாமராக போஸ் கொடுக்கும் கிரண் டுவிட்டர் அலப்பறைகள்!
Next articleஅதிதீவிர ‘ஆம்பன்’ புயலால் 72 பேர் பலி, மேற்குவங்கத்தில் கரையை கடந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here