Home சினிமா கோலிவுட் Aruva Movie: ஹரி கூட்டணியில் சூர்யா ‘அருவா’ வீச்சு

Aruva Movie: ஹரி கூட்டணியில் சூர்யா ‘அருவா’ வீச்சு

538
0
Aruvaa Movie சூர்யா அருவா

Aruvaa Movie: ஹரி கூட்டணியில் சூர்யா அருவா வீச்சு. suriya new movie title aruva. சூர்யாவின் புதிய படத்தின் பெயர் அருவா. கோலிவுட் செய்திகள்.

சூர்யாவிற்கு கடந்த காலமாகவே படங்கள் மிகப்பெரிய வெற்றிபெறவில்லை. அடுத்ததாக சூறரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் ஹரிக்கும் கடைசியாக வந்த சாமி 2 படம் சரியாக அமையவில்லை. ஹரி இயக்கத்தில் சூர்யா ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 படங்களில் நடித்தார். படங்களும் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றது.

அடுத்தாக இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. ஸ்டுடியோ கிரீனின் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

Aruvaa Movie – சூர்யா அருவா

அந்த அறிக்கையில், “சூர்யா நடிக்கும் 39-வது படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக K.E ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது சூர்யா, இயக்குனர் ஹரி இணையும் 6-வது படம். இயக்குனர் ஹரியின் 16-வது படம்.
இசை டி.இமான், இவர் சூர்யாவுடனும், இயக்குனர் ஹரியுடனும் முதல் முறையாக இணைகிறார்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, 2020 தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

ஞானவேல் ராஜா, சூர்யாவை வைத்து இதுவரை ஆறு படங்களை தயாரித்துள்ளார். சூர்யாவும் ஞானவேல் ராஜாவும் இணையும் ஏழாவது படமாகும்.

ஹரி, சூர்யாவை ஆறு மற்றும் வேல் படத்தில் அருவா தூக்க வைத்து, சிங்கம் சீரிஸ் படங்களில் கண்ணியமான போலிஸ் அதிகாரியாக தோன்றவைத்து, மறுபடியும் அருவா எடுக்க வைக்கிறார்.

இந்த தீபாவளி சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Previous articleMaster Sethupathi: விஜய்க்கு நச்சுன்னு 1,35,263-வது முத்தம்
Next articleShalu Shammu: இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் வெளியேறிய ஷாலு ஷம்மு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here