டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா: ஆமை வேக தோனி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இறுதி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. நேரடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.
முதல் போட்டியில் இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக தல தோனி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தோனி 37 பந்துகளைச் சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஸ்ட்ரைக் ரேட் 78.38 மட்டுமே ஆகும். நாளுக்கு நாள் மோசமான சாதனைகளை தோனி செய்து வருகிறார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் ராகுல் அரைச்சதம் அடித்தார்.
அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
தோனியின் தடுமாற்றத்தைப் பார்த்து அவரது ரசிகர்களே தயவு செய்து ஓய்வு பெறுங்கள் தோனி என்று ட்வீட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
தோனியின் மந்தமான ஆட்டம் இந்தியா அணியின் மிடில் ஆர்டரை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.
உலகக் கோப்பைக்கு சில மாதங்களே உள்ளன இந்த நேரத்தில் தோனி சொதப்புவது ரசிகர்களுக்கு மேலும் வருத்தம் அளித்துள்ளது.
தோனியின் ஒரு சிறப்பு அம்சம் ஒவ்வொரு முறையும் அவரைப்பற்றி விமர்சனம் எழும்பொழுதும் அவர் சிறப்பாக செயல்படுவார். இந்த முறை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.