சந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர் ரகசியம்! தெரியுமா உங்களுக்கு?
சிவ்நாராயின் சந்தர்பால், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரரும் ஆவார். மற்ற கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும், சற்று வித்தியாசமாக தென்படுவார்.
நண்டு பாணியில் பேட்டிங் ஆடுவதில் வல்லவர். நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கும் ஜெயசூரியாவிற்கும் அடுத்து இவரே. ஆட்டமிழக்காமல் 1051 பந்துகள் தொடர்ந்து விளையாடிய ஒரே வீரர்.
கண்ணிற்கு கீழ் எப்பொழுதும் கருப்புநிற ஸ்டிக்கருடன் காணப்படுவார்.
சந்தர்பால், கருப்புநிற ஸ்டிக்கருடன் ஏன் வலம் வந்தார்?
கால்பந்து வீரர்கள், கருப்புநிற ஸ்டிக்கரைக் கண்ணிற்கு கீழ் ஒட்டிக்கொள்வது வழக்கம். அவர்களால் கூலிங்கிளாஸ் அணிந்து விளையாட முடியாது.
கிரிக்கெட் வீரர்கள், கூலிங்கிளாஸ் உபயோகிப்பது வழக்கம். ஆனால் சந்தர்பால், கால்பந்து வீரர்களைப் பேன்று கருப்புநிற ஸ்டிக்கர் (anti glare sticker) ஒட்டிக்கொள்வார்.
ஆண்டி கிளார் ஸ்டிக்கர், சூரிய ஒளியினால் கண் கூசுவதைத் தவிர்க்கும். மேலும், சூரிய ஒளியிலும் வெப்பத்திலுமிருந்து கண்ணின் புற வெளிப்பகுதியைப் பாதுகாக்கும்.
முல்லர் (mueller) என்ற பிராண்ட் ஸ்டிக்கரை மட்டுமே சந்தர்பால் ஒட்டிக்கொள்வார். ஒருவகையில் இதுவும் ஒரு விளம்பரமே (sponsorship).
ஸ்டிக்கருக்கு தடை
சில முன்னாள் வீரர்கள் இதை எதிர்த்தனர். இருந்தாலும், சந்தர்பால் தொடர்ச்சியாக உபயோகித்து வந்தார்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், சந்தர்பால் பிராண்டெட் ஸ்டிக்கர் பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது.
ஆண்டி கிளார் ஸ்டிக்கர் மூலமும் வருவாய் ஈட்டமுடியும் என்பதே சந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர் ரகசியம்.