கோவை: ஜூன் 3 இல் 42 வயதுடைய ஒருவர் கோவையில் உள்ள ஆர்.எஸ் புரத்தில் ஒரு ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சி செய்து காவல் துறையிடம் சிக்கினார்.
மது குடிக்க ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சித்த நபர்
ஆர்.எஸ் புரத்தை சேர்ந்த டி. விஜயகுமார் என்பவர், ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை தான் எடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை எனவும், அதனால் மது அருந்துவதற்காக ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சித்ததாகவும் காவல் துறையிடம் தெரிவித்தார்.
குடித்திருந்த நிலையில் வந்த அவர் ஏ.டி.எம் இல் பணம் எடுக்க முயற்சி
வெள்ளிக்கிழமை இரவு மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு அவர் கொடுக்காத காரணத்தால், மனைவியின் ஏ.டி.எம் அட்டையை எடுத்து வந்துள்ளார். அன்று குடித்திருந்த நிலையில் வந்த அவர் ஏ.டி.எம் இல் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
திருகாணிகளை அப்புறப்படுத்தி பணம் எடுக்க முயற்சி
அன்று ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள திருகாணிகளை அப்புறப்படுத்திய அவர், ஏ.டி.எம் இல் பணம் வைக்கும் இடத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.
பொதுமக்கள் காவல் துறையிடம் புகார்
மறுநாள் ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் அங்கு யாரோ பணம் திருட முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார்கள்.
சிசிடிவி ஒளிப்பதிவில் பதிவான காட்சிகளால் சிக்கினார்
இந்த புகாரின் அடிப்படையில் கே.நாகராஜ் தலைமையில் செயல்பட்ட காவல் துறையினர் சிசிடிவி ஒளிப்பதிவில் பதிவாக காட்சிகளை ஆராய்ந்தனர் பின்னர் விஜய குமாரை திங்கள் அன்று கைது செய்து காவலில் அடைத்தனர்.