Home சினிமா கோலிவுட் கோச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வந்து ஒயின்ஷாப்பில் வேலை பார்த்தவருக்கு இப்படியொரு வாழ்க்கையா?

கோச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வந்து ஒயின்ஷாப்பில் வேலை பார்த்தவருக்கு இப்படியொரு வாழ்க்கையா?

0
636
Senthil Birthday

Senthil Birthday; கோச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வந்து ஒயின்ஷாப்பில் வேலை பார்த்தவருக்கு இப்படியொரு வாழ்க்கையா? நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

செந்தில் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா என்றால், செந்தில், கவுண்டமனி இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவை தனது நகைச்சுவைக்குள் வைத்திருந்தார்.

செந்தில் வாழ்க்கை (Comedy Actor Senthil)

கடந்த 1951 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள இளஞ்சம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் நம்ம காமெடி நடிகர் செந்தில்.

செந்தில் பெற்றோர்

ராமமூர்த்தி – திருகம்மாள்…

செந்தில் திருமணம் (Senthil Marriage)

செந்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்கள்.

இவரின் முதல் மகன் மணிகண்டபிரபு டாக்டராக இருக்கிறார். 2ஆவது மகன் ஹேமசந்திரபிரபு சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

வீட்டைவிட்டு வெளியேறிய செந்தில்

தனது அப்பா திட்டியதால் 13ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய செந்தில், சென்னைக்கு வந்துள்ளார். முதலில் அவர் வேலை பார்த்தது எண்ணெய் மார்ட்டில்தான். அதன் பிறகு ஒயின்ஷாப்பில் வெயிட்டராக வேலை பார்த்துள்ளார்.

கவுண்டமனி அறிமுகம் (Senthil And Goundamani)

நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போதுதான் கவுண்டமனியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பிறகு இருவரும் இணைந்து மேடை நாடகங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

மலையாள சினிமா அறிமுகம் (Senthil Malayalam Movie)

இப்படி தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, புரோடக்‌ஷன் மேனேஜர் ஒருவரது உதவியின் மூலம் இதிக்கார பக்கி (Ithikkara Pakki) என்ற மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பசி, கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தீர்ப்புகள் திருத்தப்படலாம், அர்ச்சனை பூக்கள், பொய் சாட்சி, தூறல் நின்னு போச்சு, மலையூர் மம்பட்டியான், வைதேகி காத்திருந்தாள், நான் சிகப்பு மனிதன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

செந்தில் சம்பளம் Senthil Salary

கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ரூ.5, ரூ.100 என்றுதான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

கவுண்டமனி – செந்தில் கூட்டணி

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான உதயகீதம் படத்தில் கவுண்டமணி – செந்தில் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

செந்திலின் மார்க்கெட்டும் சூடு பிடித்தது. சம்பளமும் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக உயர்ந்தது.

80 படங்கள்!

1979 ஆம் ஆண்டு ஓரிரு படங்களில் நடித்து வந்த செந்திலுக்கு 1984 ஆம் ஆண்டு 17 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு 29 படங்கள், 1986 ல் 36 படங்கள் என்று வரிசை கட்டி சினிமாவை கலக்கி வந்தார்.

செந்தில் நடித்த ஒரு வருடம் 80 படங்கள் வெளியாகியது. ஒரே நேரத்தில் 45 படங்களில் எல்லாம் நடிக்கும் நிலைகூட அவருக்கு வந்துள்ளது.

1300க்கும் அதிகமான படங்கள்

தன்னால் கூட சொல்ல முடியாத அளவிற்கு 1300க்கும் அதிகமான படங்களில் செந்தில் நடித்துள்ளார். தமிமில் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் 5 ரூபா சம்பளம் வாங்கிய செந்திலுக்கு தற்போது ரூ.25 லட்சம் சம்பளமாம். விவேக், வடிவேலு கூட்டணி வரும் வரை தமிழ் சினிமாவை கலக்கு கலக்கு என்று கலக்கியவர்.

நகைச்சுவை எழுதிய வீரப்பன்

செந்திலுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதிக் கொடுத்தவர் வீரப்பன். இவர், தான் செந்திலை கவுண்டமனியிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இவ்வளவு ஏன், கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை எழுதியதே இவர்தானாம். ஆகையால், செந்திலுக்கு கிடைத்த வெற்றியில் வீரப்பனுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

செந்தில் விபத்து (Senthil Accident)

கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பின் போது தவறி விழுந்ததில் செந்திலுக்கு முதுகு எலும்பில் அடிபட்டுள்ளது. இதனால், சில வருடங்கள் ஓய்வில் இருந்தார்.

தானா சேர்ந்த கூட்டம்

செந்திலின் 6 வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கடந்த ஆண்டு வந்த ராசாத்

தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையிலும் அறிமுகமானார்.

செந்தில் வீடு

லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கிய செந்திலுக்கு சென்னையில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும். செந்திலுக்கு அவரது மனைவிதான் உலகமே. ஒருநாள் கூட அவரை படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றதே இல்லையாம்.

செந்தில் சொகுசு கார்

செந்தில் ஆடி A4 என்ற சொகுசு கார் வைத்திருக்கிறார்.இதன் மதிப்பு சுமார் 40 லட்சம். மேலும் இவரிடம் ரூ.18 லட்சம் மதிப்பில் ஸ்க்ரோடா ஆக்டோவியா காரும் உள்ளது. அதோடு, ரூ.16 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா இநோவா காரும் வைத்து உள்ளார்.

செந்தில் அரசியல் வாழ்க்கை

ஆரம்பத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த செந்தில், தற்போது அமமுக கட்சியில் இருக்கிறார். அதுவும் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்தப் பதவியில் கோகுல இந்திரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் உடன் இணைந்து கதிர்காமு, ராஜா மாணிக்கம், தேவதாஸ் மற்றும் ஹென்றி தாமஸ் ஆகியோரும் இந்த அமைப்பு செயலாளர் பதவியில் இருக்கின்றனர்.

செந்தில் பிறந்தநாள் (Senthil Birthday)

இந்த நிலையில், செந்தில் இன்றுதனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் வாயிலாக நாமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.

Happy Birthday Senthil…பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here