Home சினிமா கோலிவுட் கொரோனா வைரஸ்: தப்பிய அஜித் – மிரண்டுபோன படக்குழு

கொரோனா வைரஸ்: தப்பிய அஜித் – மிரண்டுபோன படக்குழு

865
0

கொரோனா வைரஸ் (corona virus): தப்பிய அஜித் (actor ajith kumar) – மிரண்டுபோன படக்குழு.  வலிமை படப்பிடிப்பு ரத்து (valimai shooting postpend).

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் நுழைவாயிலை இருக்க அடைத்துக்கொண்டு லக்டவுனில் உள்ளனர்.

இதனால் பல துறைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. அதில் குறிப்பாக சினிமா துறை. அவர்களுக்கு இந்த கோடை விடுமுறை காலமே நல்ல அறுவடை காலம்.

படங்கள் எக்கச்சக்கமாக ரிலீஸ் ஆகும். வசூலையும் வாரிக்குவிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து படங்களுமே ரிலீஸ் தள்ளிச்சென்று விட்டது.

பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் என்ற படம் ஜோர்டானில் படமாக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் இருந்து 58 பேர் சென்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

இதனால் ஆடுஜீவிதம் படக்குழு இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மத்திய அரசும் யாரையும் தற்போதைக்கு உள்ளே அழைத்து வரும் நிலையில் இல்லை.

இப்படிதான் கனிகா கபூர் என்ற பாலிவுட் பாடகி மற்றும் நடிகை கொரோனா தொற்றுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் யாராக இருந்தாலும் தற்போதைக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அஜித் வலிமை (ajith valimai) படப்பிடிப்பு வெளிநாடுகளில் ஏற்கனவே நடைபெற்று வந்தது. மீண்டும் சில கட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டது.

முதலில் ஸ்பெயினில் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். அங்கு கொரோனா தீவிரத்தை கண்டு ஜோர்டானுக்கு செல்ல முடிவு செய்தனர்.

அவர்கள் நல்ல நேரம் முன் கூடியே லக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் லாக்டவுன் முடிந்த பின்பு  ஜோர்டான் சென்று படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தனர்.

ஆனால், பிரித்விராஜ் போன்றவர்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தையை பார்த்து படப்பிடிப்பை சில மதங்கள் தள்ளி வைத்துள்ளனராம்.

வலிமை படப்பிடிப்பு ரத்து

அஜித் ஏற்கனவே படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் சில நாட்கள் ஓய்வில் இருந்தார். இதன் காரணமாகவே வெளிநாடு செல்ல தாமதம் ஆனது.

ஒருவேளை அஜித் படக்குழு திட்டமிட்டபடி ஸ்பெயின் சென்று இருந்தால் விபரீதத்தில் முடிந்து இருக்க வாய்ப்பு உண்டு. நேற்று மட்டுமே 1000 பேர் கொத்தாக பலியாகி உள்ளனர் அந்த நாட்டில்

“தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு” என படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சுடன் வீட்டில் ஒய்வு எடுத்து வருகின்றனர்.

Previous articleதாஜ் ஹோட்டல் மருத்துவ ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது
Next articleஇதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here