புதுடெல்லி: இந்தியாவின் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை திங்கள் கிழமை 1 கோடியை தாண்டியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள் கிழமை ஒரே நாளில் 24,248 கொரோனா தொற்றுகள்
திங்கள் கிழமை ஒரே நாளில் 24,248 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று 7 இலட்சத்தை நெருங்குகிறது. திங்கள் கிழமை 425 பேர் கொரோனாவால் இறந்ததை அடுத்து மொத்த கொரோனா இறப்பு 19,693ஆக உள்ளது.
கொரோனா பரிசோதனை திங்கள் கிழமை காலை வரை 1,00,04,101
“இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மொத்த இரத்த மாதிரிகளின் எண்ணிக்கை திங்கள் கிழமை காலை 11 மணிவரை 1,00,04,101 ஆக உள்ளது. ஜூன் 5 இல் 1,80,596 இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன,” என இந்திய மருத்துவ ஆய்வக அமைப்பின்(ICMR) விஞ்ஞானியும் மற்றும் ஊடக ஒருங்கினைப்பாளருமான, மருத்துவர். லோக்கேஷ் சர்மா தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் 1,105 பரிசோதனை கூடங்கள் உள்ள
தற்போது நாட்டில் 1,105 பரிசோதனை கூடங்கள் உள்ளதாகவும் இதில் 788 பொது மற்றும் 317 தனியார் கொரோனா பரிசோதனை கூடங்கள் எனவும், ஒரு நாளுக்கான பரிசோதனையின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.