அணை உடைந்து 60 பேர் பலி: கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் கைது!
ப்ரேசில் நாட்டில் உள்ள புருமாடின்கோ என்ற நகரின் அருகாமையில் இரும்புத்தாது சுரங்கம் ஒன்று உள்ளது.
இச்சுரங்கத்தின் அருகில் வாலி என்ற பெரிய அணைக்கட்டு ஒன்று உள்ளது. கடந்த 25-ம் தேதி வாலி அணை திடீரென உடைந்தது.
இதனால் அணையில் இருந்த தண்ணீர் அனைத்தும் வேகமாக வெளியேறியது. சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், அருகில் இருந்த இருப்புத்தாது சுரங்கதிற்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு வேலைசெய்த தொழிலாளர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதுவரை, வெள்ளத்தில் பலியாகிய 60 பேரின் உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு உள்ளன.
300-க்கும் அதிகமான நபர் என்ன ஆனார்கள் எனபதே தெரியவில்லை. சேரும் சகதியுமாக இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும் மீட்பு படையினர் கடுமையாக போராடி மீட்புப் பணியில் ஈட்டுபட்டு வருகின்றனர். ஆற்றின் குறுக்கே சென்ற ரயில் பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அணை உடைந்ததற்காக அங்கு பணி புரிந்த 5 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.