Home சினிமா இந்திய சினிமா மோனா கபூருக்கு துரோகம்; ஸ்ரீதேவி மோசமான மரணம் – கர்மா 1

மோனா கபூருக்கு துரோகம்; ஸ்ரீதேவி மோசமான மரணம் – கர்மா 1

1456
0
மோனா கபூருக்கு துரோகம்

மோனா கபூருக்கு துரோகம்; ஸ்ரீதேவி மோசமான மரணம் – கர்மா 1

கர்மாவைப் பற்றிய பொதுவான கருத்து அனைவரிடமும் உள்ளது. நாம் நல்ல செயல்களை செய்தால் நமக்கு நல்லது நடக்கும். நாம் கெட்டதைச் செய்தால் நமக்கு தீமை நடக்கும்.

கர்மா என்பது இதுபோன்ற செயலை மட்டுமே குறிக்கும். விதியை அல்ல!

நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும், கர்மாவை உருவாக்குகிறோம். நாம் உருவாக்கிய கர்மா நம்மிடமே மீண்டும் மீண்டும் வந்தது சேர்ந்துகொண்டே இருக்குமாம்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறந்த நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிப்படங்களில் நடித்த ஸ்ரீதேவி சென்ற வருடம் எதிர்பாராத விதமாக குளிக்கும் அறையில் உயிரிழந்தார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி ஆவார். போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, ஸ்ரீதேவியும் போனிகபூரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஸ்ரீ தேவி திருமணம் செய்யும் பொழுது கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் திருமணம் முடிந்த குறுகிய காலத்திலேயே மோனா கபூர் உயிரழந்தார்.

கர்மாவின் செயல் 

தன்னுடைய மகன் அர்ஜூன் கபூர் நடித்த முதல் படத்தைப் பார்க்க முடியாமல் மோனா கபூர் உயிரழந்தார்.

போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் பிறந்த மகன் தான் அர்ஜூன் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தன்னுடைய மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் திரைப்படத்தைப் பார்க்க இயலாமல் ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

இவருடைய இறப்பும் ஒரு மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. மேலும் குடிப்பழக்கத்தால் உயிரிழந்தார் என்ற அவப்பெயருடன் உலகைவிட்டுச் சென்றுள்ளார்.

நாம் செய்தது நமக்கே வந்தடையும். கர்மாவை ஒரு பொழுதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

இன்னும் பல உண்மைக்கதைகள் உங்களுக்காக கர்ம வினைப்பகுதியில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

Previous articleவிஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்!
Next articleஅணை உடைந்து 60 பேர் பலி: கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் கைது!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here