Home சினிமா கோலிவுட் புருஷன் வேண்டும்…என் குழந்தைக்கு அப்பா வேண்டும்: பீட்டர் பால் மனைவி புகார்!

புருஷன் வேண்டும்…என் குழந்தைக்கு அப்பா வேண்டும்: பீட்டர் பால் மனைவி புகார்!

518
0
Peter Paul Wife Elizabeth Helen

Peter Paul Wife; என் புருஷன் வேண்டும்…என் குழந்தைக்கு அப்பா வேண்டும்: பீட்டர் பால் மனைவி புகார்! எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், என் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்றும், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பீட்டர் பாலின் மனைவி பரபரப்பாக புகார் அளித்துள்ளார்.

எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், என் குழந்தைக்கு அப்பா வேண்டும் என்றும் பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார்.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து எலிசபெத் ஹெலன் கூறுகையில், பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்காக இரு முறை போதை மீட்பு மையத்தில் அவரை சேர்த்திருந்தோம்.

இதற்கு முன்னதாக பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். சரியான வருமானமும் இருக்காது.

தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட நினைத்துவிட்டார். அவருக்கு இது பத்தோடு பதினொன்னு போலத்தான் என்று கூறியுள்ளார்.

மேலும், எனது மகனின் படிப்புக்காகதான் நான் அவரை விட்டு விலகினேன். அதன் பிறகு எனது அம்மா வீட்டில் இருந்தேன். தற்போது பீட்டர் பால் திருமணம் குறித்து அனைவரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.

இப்போது எனது மகள் அப்பா இல்லையே என்று வருத்தப்படுகிறாள். எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், எனது குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவேஷம் கலைஞ்சுபோச்சி – பா.ரஞ்சித் வெளியிட்ட கூத்துக்கலைஞர்களின் ஆவணப்படம்!
Next articleஇந்தியா டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன ஆன்ட்ராய்ட் செயலிகளை தடை செய்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here