எனை நோக்கி பாயும் தோட்டா: தனுஷுக்கு பதில் டப்பிங் பேசிய கௌதம்மேனன்
கெளதம் வாசுதேவ் மேனன் மின்னலே படம் மூலம் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகமானவர். அவருக்கென தனி முத்திரை பதித்தவர்.
ஆனால் 2015-க்கு பிறகு அவருக்கு நேரம் சரியில்லை. வச்ச குறை, தொட்ட குறையாக சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கினார்.
சிம்புவின் கிரகம் கவுதம் மேனனைத் தொற்றிக்கொண்டதோ என்னவோ? சிம்பு தற்பொழுது அனைத்துப் படங்களிலும் சரியாக நடித்து, சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகிறது.
ஆனால், கவுதம் மேனன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அவருக்கே தெரிவதில்லை. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு சம்பள பாக்கி.
இதனால் பாக்கி ஒன்றைக்கோடி சம்பளத்தை திருப்பிக்கொடுத்தால் தான் படத்திற்கு டப்பிங் பேசிக்கொடுப்பேன் என தனுஷ் கறாராக உள்ளாராம்.
இதனால் கவுதம் மேனன் படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்காக தனுஷிற்கு பதில் அவரே டப்பிங் பேசி உள்ளார்.
அந்தக் காப்பியை வைத்து சென்சார் அதிகாரிகளை கரெக்ட் செய்து படத்திற்கு சென்சார் சர்ட்டிபிக்கேட்டும் வாங்கி ரிலீசுக்கு தயாராகிவிட்டார்.
ஆனால் அவருடைய வாய்ஸ் படத்தில் வந்தால் நன்றாக இருக்காதல்லவா? அதனால் தனுஷை எப்படியாவது சமாதனம் செய்து டப்பிங் பேசவைக்கும் முனைப்பில் உள்ளாராம்.