Home சினிமா கோலிவுட் Corona: கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை – தொழிலாளர் வேதனை: ஆர்.கே.செல்வமணி!

Corona: கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை – தொழிலாளர் வேதனை: ஆர்.கே.செல்வமணி!

570
0
RK Selvamani FEFSI

FEFSI R K Selvamani; கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை – தொழிலாளர் வேதனை: ஆர்.கே.செல்வமணி! தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்கே செல்வமணி நடிகர், நடிகைகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் ஆர்கே செல்வமணி நடிகர், நடிகைகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: உலக முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட உலகம் முடக்கியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை, தயாரிப்பாளர்களை எதிர்த்து ஊதிய உயர்வு கேட்டும், அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு வேலைநிறுத்த போராட்டங்களை சந்தித்துள்ளனர்.

ஆனால், தற்போது நடக்கின்ற வேலை நிறுத்த போராட்டம் முற்றிலும் வேறுபட்டது. தேசம் மற்றும் சமூகத்தை காக்கவேண்டும் என்பதற்காக தங்களே தாங்களே முடக்கிக் கொண்டு நடைபெறுகின்ற இந்த வேலை முடக்கம் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை மிகவும் பாதித்துள்ளது.

சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 25 ஆயிரம் பேரில், ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று தினசரி வருமானம் பெற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் அப்பாவி தொழிலாளர்கள்.

இன்று காலை லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு போன் செய்து சார், வேலை நிறுத்தம் எப்போது முடியும் என்று கேட்டார். நான் 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும் என்றேன்.

இதற்கு, சார் வேலைக்கு சென்று செத்தாலும் கூட பரவாயில்லை. சாப்பாடு இல்லாமல் எனது குழந்தைகள் பசியால் சாவதை விட கொரோனா  வைரஸால் நான் செத்தாலும் பரவாயில்லை என்று வேதனையுடன் கூறிய போது ஏற்பட்ட மன வேதனைகளை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

திரைப்பட துறையில் நல்ல நிலையில், இருக்கின்ற நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும், திரைப்பட தொழிலின் மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

நமது சம்மேளத்தில் உறுப்பினராக இருக்கும் 25 ஆயிரம் பேரில் இவரைப் போன்று ஒரு வேலை சோற்றிற்கு கூட கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

அவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட  ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் கட்டமாக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleInfinix Hot 9 specs tamil : 5000Mah Battery, 4GB Ram 128 Storage Under 10000, Unboxing | Infinix Hot 9 | 2020
Next articleதொழிலாளர்களுக்காக ஓடோடி வந்த சூர்யா, கார்த்தி, சிவகுமார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here